குரு பெயர்ச்சி 2024.. கோடி கோடியாக செல்வ யோகத்தை பெறப்போக்கும் ராசிகள்
மேஷம்: குரு பகவான் மேஷ ராசியில் இருந்து விலகி ரிஷப ராசிக்கு செல்கிறார், இதனால் மேஷ ராசிக்காரர்களு வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். போட்டித் தேர்வுகளை எழுதும் மேஷ ராசி மாணவர்கள் வெற்றி காண்பார்கள். குடும்பத்தில் சுபகாரியம் நிறைவேறும். தடைகள் நீங்கி திருமணம் சிறப்பாக நடைபெறும்.
சிம்மம்: குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் இருந்து 10 ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இதனால் சிம்ம ராசிக்கு தொட்டது துலங்கும் மண்ணும் பொன்னாகும். மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். அளவிட முடியாத அளவிற்கு பண வரவு ஏற்படும். கோடிகளில் செல்வத்தை குவிப்பீர்கள். கவலைகளும் கஷ்டங்களும் நீங்கும். புதிய தொழில் தொடங்க சாதகமான நேரம்.
கன்னி:குரு பகவான் பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் உண்டாகும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். சுப காரியங்கள் மளமளவென நடைபெறும். புகழும் கீர்த்தியும் அதிகரிக்கும். நீண்ட நாட்களுக்கு முன் கடனாக கொடுத்த பணம் உங்கள் வீடு தேடி வரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கம் நீங்கப்போகிறது.
துலாம்: குரு பகவான் துலாம் ராசிக்கு நன்மையே செய்வார். நன்மைகளை அள்ளித்தருவார். வெளிநாடு வேலை வாய்ப்பு தேடி வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சியில் நடக்கும். குடும்பத்தில் பொறுப்புகள் தேடி வரும். வீடு வாங்கும் யோகம் தேடி வரும். பண வரவு ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களைத் தேடி வரும் நல்ல வாய்ப்புகள் வரும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் திருமண சுப காரியம் கைகூடி வரும். தொழில் வியாபாரம் சிறப்பான லாபத்தை கொடுக்கும். எழுத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி யோகம் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும் கடன் பிரச்சினைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.