குரு ஆட்டம் இன்னும் 291 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பண மழை, செல்வம், புகழ்

Sat, 27 Jul 2024-3:49 pm,

ஜோதிடர்களின் கூற்றுப்படி, தற்போது குரு ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். ஆனால் அடுத்த ஆண்டு மே 14 ஆம் தேதி, குரு பகவான் வியாழன் ரிஷப ராசியிலிருந்து வெளியேறி மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த நிகழ்வானது மே 14ம் தேதி இரவு 10.36 மணிக்கு நடைபெறும். இந்த ராசி மாறுவதால் சிறப்பான பலன் கிடைக்கும்.

துலாம்: குரு பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நிதி நெருக்கடியிலிருந்து விடுப்படுவீர்கள். வாழ்க்கை துணையில் ஆதரவைப் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். செல்வ மழை பொழியும்.

ரிஷபம்: மிதுன ராசியில் நடக்கப் போகும் குரு பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு செல்வ மழை பொழிய வைக்கும். திருமணம் நடக்கும். நிதி நிலை முன்பை விட மேம்படும். செலவுகள் அதிகரிக்கலாம். புதிய வேலை வாய்ப்புகளை பெறலாம். திருமண வாழ்க்கை இனிமையாகவும் இருக்கும்.

சிம்மம்: மிதுன ராசியில் நடக்கப் போகும் குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். தொழில் தொடர்பாக வெளிநாட்டில் சில ஒப்பந்தத்தை பெறலாம். வாழ்க்கை துணையுடன் இருந்து பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். நிதி நிலையும் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.

 

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் நன்மை உண்டாகும். தடைபட்ட வேலைகள் மீண்டும் தொடங்கலாம். தொழிலில் பதவி உயர்வு பெறலாம், பல முக்கிய பொறுப்புகளை பெறலாம். சுபிட்சம் வந்து சேரும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். பிள்ளைகள் தரப்பிலிருந்தும் நல்ல செய்திகள் கிடைக்கும்.

 

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link