30 கிலோ தங்கமீன்! பாரீஸில் கண்டெடுக்கப்பட்ட Goldfish
)
42 வயதான Andy Hacket என்பவருக்கு 30 கிலோ தங்கமீன் கிடைத்துள்ளது. பிரான்சின் ஷாம்பெயின் பகுதியில் உள்ள ப்ளூ வாட்டர் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவருக்கு அதிர்ஷ்டம் வலையில் வந்து விழுந்தது
)
மீனின் எடை 67.4 பவுண்டுகள் அல்லது 30 கிலோ 572 கிராம். மீனுக்கு சுமார் 20 வயது இருக்கும். இந்த மீன் கலப்பினத்தை சேர்ந்தது. அடர் ஆரஞ்சு நிறத்தில் உள்ள இந்த அழகான மீனை, பாரீசில் ``கேரட்'' என்று அழைக்கின்றனர்
)
பலர் இந்த மீன் பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, கொக்கியை இழுக்கும்போது, ஒரு பெரிய மீன் சிக்கியது சுமார் 25 நிமிட முயற்சிக்குப் பிறகு, சிவப்பு நிற ஆரஞ்சு தங்கமீன் வலையில் சிக்கியது. இது இதுவரை பிடிபட்டவற்றில் மிகப்பெரிய தங்கமீனாக இருந்தது.
ஆரஞ்சு நிறத்தில் தங்க மீன். தங்கமீனை தங்கள் வீட்டில் வைக்க விரும்புபவர்கள் அதிகம். அழகான ஆரஞ்சு தங்கமீன்கள் அனைவரின் விருப்பமாக உள்ளது