Good Cholesterol: உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க சூப்பர் வழிகள்
'நல்ல கொலஸ்ட்ரால்' எச்டிஎல் என்றும், 'கெட்ட கொலஸ்ட்ரால்' எல்டிஎல் என்றும் அழைக்கப்படுகிறது. நல்ல கொலஸ்ட்ரால் நம் இதயத்திற்கு நன்மை பயக்கும். இது இரத்தத்தில் உள்ள கூடுதல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் நடைபயிற்சி, ஓட்டம், ஜாகிங், நீச்சல் ஆகியவற்றை செய்யலாம், அல்லது ஜிம்மிற்குச் சென்றும் உடற்பயிற்சி செய்யலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவு என்பது முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு நீண்ட காலத்திற்குப் பிறகு பயன்படுத்தப்படும் உணவுகளாகும். கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் டிரான்ஸ் ஃபேட் மற்றும் சாச்சுரேட்டட் ஃபேட் இவற்றில் அதிகமாக இருப்பதால், அத்தகைய உணவை உங்கள் தினசரி உணவில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
இனிப்புகளை அதிகமாக சாப்பிடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில் சர்க்கரையை அதிகமாக சாப்பிடுவதால், கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து, நல்ல கொழுப்பின் அளவு குறையத் தொடங்குகிறது. எனவே, உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க இனிப்புப் பொருட்களைத் தவிர்க்கவும்.
உடல் எடையை குறைப்பதும் மிக முக்கியம். உங்கள் எடை அதிகரித்திருந்தால், நீங்கள் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். இதனுடன், நீங்கள் புகைபிடிப்பதையும் தவுர்க்க வேண்டும். ஏனெனில் புகைபிடிப்பது உங்கள் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)