நல்ல கொலஸ்ட்ராலை உடலில் அதிகரிக்கச் செய்யும் இந்த 7 உணவுகள் - அடிக்கடி சாப்பிடுங்க!
தேங்காய் எண்ணெய்: இதில் 90% நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. இது வளர்சிதை மாற்றத்தை தூண்டும், தேவையின்றி எழும் அதிக பசியை கட்டுப்படுத்தும். ஒருநாளுக்கு மட்டும் இது 129 கலோரிகளை கொடுக்கும்.
ஃபேட்டி மீன்கள்: ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் அதிகமாக இருக்கும் மீன்கள், நல்ல கொழுப்பை உடலில் அதிகரிக்கச் செய்யும், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும். சால்மன், மத்தி மீன், சூரை மீன் ஆகியவை இதற்கு உதாரணம்.
டார்க் சாக்லேட்: இதில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள், கனிமங்கள், ஃபைபர்கள் மட்டுமின்றி நல்ல கொழுப்பும் நிறைந்திருக்கிறது. இதனை சாப்பிட்டால் இதய நோய் வரும் ஆபத்து குறையும். தோலின் வயதாகும் தன்மையை தாமதமாக்கும்.
முட்டை: இதனை நீங்கள் தினமும் சாப்பிடலாம். இதில் வைட்டமிண் டி உள்பட மற்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்திருக்கின்றன. அதேபோல், இதை முழுவதுமாக சாப்பிட்டாலம் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்காது.
ஆலிவ் ஆயில்: இதில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமிண் இ, கே ஆகியவை அதிகம் இருக்கின்ன. இது உடல் ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும், கெட்ட கொலஸ்ட்ராலால் வரும் பிரச்னைகளை குறைக்கும், அதிக ரத்த அழுத்தத்தை சீராக்கும்.
நட்ஸ்: வேர்க்கடலை, வால்நட்ஸ், பிஸ்தா போன்றவை இதய ஆரோக்கியத்திற்கு வலுசேர்க்கும் கொழுப்புகளை பெற்றுள்ளன. தாவர ஸ்டெரோல்கள் என்ற ஒன்றும் இதில் உள்ளது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ராலில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.
சீஸ்: இதனை பாலாடைக்கட்டி எனவும் சொல்வார்கள். இதில் புரதம், கால்சியம், வைட்டமிண் பி12 மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நல்ல கொலஸ்ட்ராலை அதகிரிக்கும். அதேபோல் நீங்கள் ஒரு கிளாஸ் பால் குடிக்கும்போது கிடைக்கும் புரதம் இதைச் சாப்பிட்டாலே கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்த தகவல்களை கொண்டு உங்களின் விழிப்புணர்வுக்காக எழுதப்பட்டது. எனினும், இதனை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்பதை மறக்காதீர்கள். இதற்கு Zee News பொறுப்பேற்காது.