புத-ஆதித்ய யோகம்... சூரியனின் அருளால் கார்த்திகையில் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்
சூரியன் பெயர்ச்சி: மாதந்தோறும் ராசியை மாற்றும் சூரியன், இந்த நவம்பர் மாதம் 16ம் தேதியன்று விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். சூரியனின் விருச்சிக ராசி சஞ்சாரம் 12 ராசிகளுக்கும் வெவ்வேறு பலன்களைத் தரும். இந்நிலையில், சூரியனின் பெயர்ச்சியினால் கார்த்திகை மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
சூரியன் பெயர்ச்சி: நவம்பர் 16 அன்று, சூரியன் விருச்சிக ராசியில் பெயர்ச்சியாகிறார். கடந்த அக்டோபர் 29 அன்று, புதன் விருச்சிக ராசியில் நுழைந்த நிலையில், கிரகங்களின் ராஜாவான சூரியனும் புதனும் இணைந்து, உருவாகும் புத ஆதித்ய யோகத்தினால், சில ராசிகள் நிதி நன்மைகளையும் வெற்றிகளையும் பெறுவார்கள்.
ரிஷபம்: சூரியனின் சஞ்சாரத்தின் தாக்கத்தால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வேலை, வியாபாரத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். நிலை நிலை வலுவடைந்து, பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மிகவும் நன்மை பயக்கும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். எதிர்பாலின நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள்.
கடகம்: சூரியனின் சஞ்சாரம் உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். வேலையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடனாக கொடுத்த பணத்தை திரும்ப கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். முதலீடுகள் நன்மை பயக்கும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு ஓங்கும். பொருளாதார நிலையை மேம்படுத்த தொடரும் முயற்சிகள் வெற்றி பெறும்.
விருச்சிகம்: சூரியனின் அருளால், உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கும். உங்களின் பதவி, கௌரவம் உயரும் போது, உங்கள் புகழும் மரியாதையும் கூடும். புத பகவானும் சூரிய பகவானும் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பார்கள். இருப்பினும், இந்த நேரத்தில் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால், கவனமாக இருக்கவும்.
மகரம்: சூரியனின் தாக்கத்தால் இந்த காலகட்டத்தில் முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு ஏற்படலாம். உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் தலைமைத்துவ திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த நேரத்தில் உங்கள் நெருங்கிய உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவாரள். நண்பர்களின் உதவியால் முக்கிய வேலைகள் அனைத்தும் முடிவடையும்.
கும்பம்: கும்ப ராசிகளுக்கு புதன் மற்றும் சூரியன் இணைவது சுப பலன்களைக் கொடுக்கும். சூரியபகவானின் அருளால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதிய கார், வீடு வாங்கும் விருப்பம் நிறைவேறும். ஆன்மீகத்தில் உங்கள் ஆர்வம் மற்றும் முன்னேற்றம் அதிகரிக்கும். நோய் தொந்தரவுகள் நீங்கி உடல் ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.