மே 1 குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அமர்க்களமாய் இருக்கும்: நாளை முதல் நல்ல நேரம்
ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும், சனி பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. நாளை நிகழவுள்ள குரு பெயர்ச்சி இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
ரிஷபத்தில் குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதன் காரணமாக அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும்.
ரிஷபம்: மே 1 ஆம் தேதி நடக்கவுள்ள குரு பெயர்ச்சி ரிஷபத்தில் தான் நடக்கவுள்ளது. ஆகையால், இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு குபேர யோகத்தின் முழுப் பலன்கள் கிடைக்கும். இவர்கள் வியாபாரம், தொழில், கல்வி, பண விஷயங்களில் வெற்றி பெறுவார்கள். அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுவார்கள்.
மிதுனம்: குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். உங்கள் நிதி நிலை முன்பை விட வலுவாக இருக்கும். குருவின் அருளால் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
கடகம்: குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு அனைத்து பணிகளிலும் சிறப்பான பலன்களை அளிக்கும். அனைத்து பணிகளிலும் இவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். எதிர்பாராத பணத்தால் ஆதாயம் அடைவீர்கள். ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். குரு அருளால் கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும்.
சிம்மம்: குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் குருவின் பரிபூரண அருள் கிடைக்கும். இந்த காலத்தில் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். சிம்ம ராசிக்காரர்களுக்கு செல்வம் வருவதற்கான பல புதிய வழிகள் திறக்கப்படும். குரு பெயர்ச்சியின் சுப பலன்களால் வாழ்வில் மகிழ்ச்சியும் ஆறுதலும் அதிகரிக்கும்.
கன்னி: குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு வேலை, வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றியடையும். குருவின் அருளால் பணப் பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடுவீர்கள்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். அதிகமான வருமானம் இருக்கும். திருமணம் நிச்சயம் ஆகும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமாக இருக்கும். அதன் தாக்கத்தால் இவர்களது புகழ் உயரும். அதிக பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாகவும் வலுவாகவும் இருக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள்
குரு பகவானின் அருள் பெற தினமும் குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மகேஷ்வர குரு சாக்ஷாத் பரபிரம்மா, தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ என்ற மந்திரத்தை கூறுவது நல்லது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.