இந்த Week-End பார்க்க சிறந்த படங்கள்!

Sat, 19 Feb 2022-1:46 pm,

விலங்கு (ஜீ5-ல் ஸ்ட்ரீமிங்) :

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஏழு பாகங்களாக உருவாகியுள்ள வெப் தொடர் 'விலங்கு'.  இது மாறுபட்ட கதைக்களத்தில் அமைந்த க்ரைம் த்ரில்லர் படமாகும்.

ஹிருதயம் (டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங்) :

வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த மலையாள மொழி திரைப்படம் 'ஹிருதயம்'.  17 வயது முதல் 30 வயது வரை கதாநாயகனின் வாழ்க்கையில் நடக்கும் தருணங்களை பயணத்தை குறிக்கும் விதமாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது

பங்கர்ராஜூ (ஜீ5-ல் ஸ்ட்ரீமிங்) :

2016-ம் ஆண்டு வெளிவந்த சூப்பர்நேச்சுரல் டிராமா திரைப்படமான 'சொக்கடே சின்னி நயனா' படத்தின் தொடர்ச்சி தன ''பங்கர்ராஜூ'' படம் .  சின்ன பங்கர்ராஜூவான நாக சைதன்யாவிற்கு, அவரது தாத்தாவான நாகார்ஜுனா எப்படி உதவி செய்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.

மேப்பாடியான் (அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங்) :

விஷ்ணு மோகன் இயக்கத்தில் வெளிவந்த மலையாள மொழிப்பாடம் ''மேப்பாடியான்''.  அமைதியான நபராக இருக்கும் கதாநாயகன் சில சூழ்ச்சிகளில் மாட்டிக்கொண்டு அந்த குழப்பத்தில் இருந்து எப்படி வெளியே வர முயற்சிக்கிறான் என்பதே இப்படத்தின் கதை.

பெஸ்ட்செல்லர் (அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங்) :

இது சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வெப் தொடர்.  இது ஒரு எழுத்தாளரை பற்றிய படமாக அமைந்துள்ளது, அவர் வாழ்வில் ஏற்படும் சில எதிர்பாராத சம்பவங்களை இப்படம் காண்பிக்கிறது.

IRAI (ஆஹா வீடியோவில் ஸ்ட்ரீமிங்) :

ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் உருவானது IRAI.  சிறுவனின் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளியை பிடிக்க அதிகாரி எடுக்கும் முயற்சிகள் தான் இந்த படத்தின் கதை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link