இனி இந்தியா முழுவதும் இந்த சார்ஜிங் கேபிள் தான்... விரைவில் முக்கிய அறிவிப்பு
இந்தியாவில் உள்ள 10 நுகர்வோரில் ஒன்பது பேர் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சார்ஜிங் கேபிள்களை ஒரே மாதிரியானதாக மாற்றும் அரசின் நடவடிக்கையை ஆதரிக்கின்றனர். வரும் 2025 மார்ச் மாதத்திற்குள் மின்னணு தயாரிப்புகளுக்கான நிலையான சார்ஜிங் போர்ட்டாக USB Type-C கேபிளை பின்பற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெவ்வேறு சாதனங்களுக்கான வெவ்வேறு சார்ஜர்கள் என்பது நிறுவனங்கள் அதிக பாகங்கள் விற்க உதவுகின்றன என்று 10 நுகர்வோரில் ஏழு பேர் நம்புகிறார்கள்.
வெவ்வேறு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் நிறுவனத்தைப் பொருட்படுத்தாமல் வெவ்வேறு சார்ஜிங் கேபிள்களைக் கொண்டிருக்கும் தற்போதைய அமைப்பு நன்றாக இருப்பதாக 6 சதவீத நுகர்வோர் மட்டுமே கூறியுள்ளனர்.
உற்பத்தியாகும் மின்-கழிவுகளின் அளவைக் குறைக்க ஒவ்வொரு வீட்டிற்கும் சார்ஜர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கத்துடன், ஐரோப்பிய ஒன்றியம் (2025 ஜூன் மாதத்திற்குள்) செய்ததைப் போல, பொதுவான சார்ஜிங் போர்ட் குறித்த நுகர்வோர் விவகாரக் குழுவின் பரிந்துரைகளை இந்தியா விரைவில் ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது.
பரிந்துரைகள் நுகர்வோர் விவகாரத் துறையால், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன, இது விரைவில் கட்டமைப்பை அறிவிக்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு அறிக்கையின்படி 78 சதவீத நுகர்வோர் அனைத்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களிலும் ஒரே மாதிரியான USB சார்ஜிங் கேபிள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்கள் போன்ற பல்வேறு சாதனங்களுக்கு வெவ்வேறு சார்ஜிங் கேபிள்கள் இருப்பதால் பெரும்பாலான இந்திய நுகர்வோர் மகிழ்ச்சியடையவில்லை என்றும், துணைக்கருவிகளின் விற்பனையை அதிகரிக்க பிராண்டுகளும் அதையே செய்கின்றன என்றும் நுகர்வோர் நினைகின்றனர்.
நிறுவனங்களால் செய்யப்பட்ட சார்ஜிங் கேபிள்கள் அதிக விலையில் இருப்பதால், பெரும்பான்மையானவர்கள் பொதுவான பதிப்புகளை வாங்குகிறார்கள்.