EPF Interest: விரைவில் வருகிறது PF வட்டித்தொகை.. கணக்கில் செக் செய்வது எப்படி?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் நீண்ட நாட்களாக வட்டித் தொகை தங்கள் கணக்கில் டெபாசிட் ஆக காத்திருக்கின்றனர். அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு EPFO இலிருந்து ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. வட்டிப் பணம் ஜூலை மாதத்திற்குள் EPFO உறுப்பினர்களின் கணக்குகளைச் சென்றடையலாம். இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை நிதி அமைச்சகம் விரைவில் வெளியிடக்கூடும்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO இன் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு, நிதியாண்டு 2024 (FY 24) -க்கு 8.25% வட்டி விகிதத்தை பிப்ரவரியில் அங்கீகரித்துள்ளது. ஆனால் நிதி அமைச்சகம் இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. பொதுத் தேர்தல்கள் காரணமாக அது தாமதமானதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த பணி ஜூலை மாதத்திற்குள் முடியும் என தெரிகிறது.
இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) தொடர்ந்து தங்கள் இபிஎஃப் கணக்கின் (EPF Account) பாஸ்புக்கை தொடர்ந்து செக் செய்து கொண்டிருந்தால், EPF வட்டி பணம் வந்துள்ளதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளலாம். மிஸ்டு கால் அல்லது எஸ்எம்எஸ் போன்ற வசதிகள் மூலமும் EPFO போர்ட்டல் மூலமும் EPF பாஸ்புக்கை இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) செக் செய்யலாம்.
பிஎஃப் உறுப்பினர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் இபிஎஃப் இருப்பை (EPF Balance) செக் செய்யலாம். ஆன்லைனில் EPFO இணையதளம் அல்லது உமங் செயலி மூலமாகவும், ஆஃப்லைனில் எஸ்எம்எஸ் அல்லது மிஸ்ட் கால் கொடுத்தும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
முதலில், https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற EPFO போர்ட்டலுக்குச் செல்லவும். இதற்கு உங்களின் UAN (யுனிவர்சல் அக்கவுன்ட் எண்) ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். தளம் திறந்தவுடன், 'Our Services' டேபுக்குச் சென்று, கீழ்தோன்றும் மெனுவை ‘for employees’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். சர்வீஸ் காலமின் கீழ், 'member passbook' -இல் க்ளிக் செய்யவும். அடுத்த பக்கத்தில் உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். கேப்ட்சாவை உள்ளிட்டு உள்நுழைக. லாக் இன் செய்த பிறகு, உறுப்பினர் ஐடியை உள்ளிடவும். இதற்குப் பிறகு உங்கள் EPF Balance தெரியும்.
உமங் செயலி மூலம் இருப்பை சரி பார்க்க உமங் செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த செயலியில் பணியாளர்கள் 127 வகையான சேவைகளின் பலனைப் பெற முடியும். இருப்பை சரிபார்க்க முதலில் உமங் செயலியில் லாக் இன் செய்ய வேண்டும். அடுத்து View Passbook என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு UAN எண்ணை உள்ளிடவும். உங்கள் மொபைலில் OTP வரும், அதை உள்ளிடவும். அதன் பிறகு, இ-பாஸ்புக்கைக் காண உறுப்பினர் ஐடியைக் கிளிக் செய்ய வேண்டும்.
011- 22901406 என்ற எண்ணில் மிஸ்டு கால் (Missed Call) கொடுத்து உங்கள் EPF இருப்பைச் சரிபார்க்கலாம். அழைப்பிற்கு பிறகு நீங்கள் ஒரு SMS -ஐ பெறுவீர்கள். அதில் உங்கள் இருப்பு தெரியவரும். இதற்கு நீங்கள் EPF கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். உங்கள் பான் எண் மற்றும் ஆதார் எண்ணுடன், உங்கள் வங்கிக் கணக்கு எண்ணும் உங்களின் UAN உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மிஸ்ட் கால் சேவையைப் போலவே, உங்களின் அனைத்து முக்கிய ஆவணங்களும் UAN உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியும். இதற்கு நீங்கள் 7738299899 என்ற எண்ணிற்கு EPFOHO UAN ENG (அல்லது ENG க்கு பதிலாக எந்த மொழியில் நீங்கள் செய்தி அனுப்ப விரும்புகிறீர்களோ அந்த மொழியின் குறியீட்டை எழுதவும்) SMS செய்ய வேண்டும்.