கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் ஆனால் ரூ. 1 லட்சம் கிடைக்கும்..!
தமிழ்நாடு அரசு கூட்டுறவுதுறையில் புதிய இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வேர்கள், விழுதுகள் என்ற இரண்டு திட்டங்களை துணை முதலமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். வேர்கள் திட்டம் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கானது. விழுதுகள் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கானது.
வேர்கள் திட்டத்தின் கீழ் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நலன் காக்கும் வகையில் மருத்துவம், கல்வி, திருமண நிதியுதவி பெற்றுக் கொள்ளலாம். புதிய கூட்டுறவு சங்க உறுப்பினராக விரும்பினால் அருகில் உள்ள கூட்டுறவு அலுவலகத்துக்கு சென்று விண்ணப்ப படிவம் வாங்கி சேர்ந்து கொள்ளவும்.
வேர்கள் திட்டத்தில் எப்படி சேர்வது? : எல்லா கூட்டுறவு சங்கங்களை சேர்ந்தவர்களும் தனி நபர் உறுப்பினர் 100 ரூபாய் மாத சந்தா செலுத்தி சேரலாம். கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலக வலைத்தளம் பக்கத்தில் மொபைல் எண் உள்ளிட்டால், மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதனை மீண்டும் உள்ளிட்டு லாகின் செய்து கொள்ளுங்கள். அதன்பிறகு உங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
திட்டத்தின் பயன்கள் : உறுப்பினர் இயற்கை மரணம் எய்தினால் ரூ.50,000, இரு குழந்தைகளின் கல்விச் செலவு தலா ரூ.10,000, முழு உடல்ஊனம் அடைந்தால் ரூ.50,000, விபத்து மரணம் அடைந்தால் ரூ.1,00,000, இரு பெண் குழந்தைகளின் திருமணச் செலவு தலா ரூ.10,000, பகுதி உடல் ஊனம் அடைந்தால் ரூ.25,000. உறுப்பினர் எந்த நிதி பயனும் பெறாதவராக இருந்தால் செலுத்திய சந்தா தொகைக்கு ஏற்ப ரூ. 7500 முதல் ரூ. 1 லட்சம் வரை பணம் பெற முடியும்.
எவ்வாறு நிதி உதவி பெறுவது? : உறுப்பினர் / உறுப்பினரின் நாமினி, மரணம் / விபத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் RCS Portal வழியாக லாகின் செய்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஒடிபியை உள்ளிட்டு விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும். உங்களின் விண்ணப்பம் RCS Portal வாயிலாக சங்க நிர்வாகத்தால் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு சரக துணைப்பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும். பதிவாளர் தலைமையிலான மாநிலக் குழு நிதியுதவிக்கு பரிந்துரைத்து வழங்கும்.
விழுதுகள் திட்டத்தின் நோக்கம் : விழுதுகள் கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் நலன் காக்கும் வகையில் பணியாளர் 'விழுதுகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு மருத்துவ உதவி, அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி, திருமணம் சார்ந்த நிதியுதவி பெற்றுக் கொள்ளலாம்.
பதிவு செய்தல் : அனைத்து கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் ரூ.300/ செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம். http://rcs.tn.gov.in/rcsweb/welfare/login என்ற பதிவாளர் அலுவலக வலைத்தளபக்கத்தில் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கவும். நீங்கள் பதிவு செய்த விவரங்கள் சரிபார்க்கப்பட்டு உறுப்பினராகப் பதிவுசெய்யப்படும்.
விழுதுகள் திட்டத்தின் பயன்கள் : திட்டத்தின் உறுப்பினர் இயற்கை மரணம் எய்தினால் ரூ.1.00 லட்சம், விபத்து மரணம் எய்தினால் எய்தினால் ரூ.5.00 லட்சம் கிடைக்கும். விபத்தில் பகுதி உடல் ஊனம் அடைந்தால் ரூ.1.50 லட்சம், விபத்தில் முழு உடல் ஊனம் அடைந்தால் ரூ.2.50 லட்சம், இரு குழந்தைகளின் கல்விச் செலவு தலா ரூ.25,000, இரு பெண் குழந்தைகளின் திருமணச் செலவு தலா ரூ.25,000. திட்டத்தின் உறுப்பினராகி எந்த நிதிப்பயனும் பெறாதவர்களுக்கு ரூ.25,000/ கிடைக்கும்
நிதியுதவி பெற விண்ணப்பிக்கும் உறுப்பினர் / நாமினி, மரணம் / விபத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் RCS Portal வழியாக பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் சங்க நிர்வாகத்தால் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு சரக துணைப்பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த பரிந்துரை அடிப்படையில் பதிவாளர் தலைமையிலான மாநிலக் குழு நிதியுதவி வழங்கும்