ரேஷன் கார்டு இருந்தாலே மாதம் 1000 ரூபாய்... மகளிர் உரிமைத் தொகையில் லேட்டஸ்ட் அப்டேட்
தமிழ்நாடு அரசின் (Tamil Nadu Government) கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு (Kalaignar Magalir Urimai Thogai) விண்ணப்பித்துள்ள மகளிருக்கு மட்டும்தான் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 1 கோடிய 16 லட்சம் பயனாளர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக உரிமைத்தொகை பெற சில தகுதிகளையும் அரசு நிர்ணயித்திருந்தது.
ஆண்டுக்கு 2.50 லட்ச ரூபாய்க்கும் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், ஓராண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களைச் சேர்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் இந்த உரிமைத் தொகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் ஒரு குடும்பத்தில் பல பெண்கள் இருந்தாலும், ரேஷன் கார்டில் குறிப்பிட்டுள்ள குடும்பத்தலைவிக்கு மட்டுமே உரிமைத் தொகை வரும்.
உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கத் தவறியவர்கள், விண்ணப்பம் நிகாரிக்கப்பட்டவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் (TN Minsiter KKSSR Ramachandran) ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளார்.
அந்த வகையில், ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியில் ஊரக வளர்ச்சிபணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுகுறித்து விரிவான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.