பெரியவர்களுக்கு பட்ஜெட் விலையில் மொபைல் வாங்கணுமா...? - டாப் 5 மாடல்கள் இதோ!

Wed, 29 Nov 2023-5:22 pm,

ஸ்மார்ட்போன்கள் இப்போது அனைவரின் தேவைகளில் முக்கியமான ஒன்றாகிவிட்டது. அனைத்து வயதினரும் இப்போது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் நிலைக்கு வந்துள்ளன. 

 

அந்த வகையில், வெறும் ரூ.8 ஆயிரத்திற்கும் கீழ் உள்ள பட்ஜெட்டில் நல்ல அம்சங்களுடன் வரும் Realme, Redmi உள்ளிட்ட மொபைல்களை இதில் காணலாம். 

Realme Narzo 50i: இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி RAM மற்றும் 64ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் இணைந்து ஆக்டா கோர் பிராஸஸர் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் 8MP பிரைமரி கேமரா மற்றும் 5MP ஏஐ செல்பீ கேமரா உள்ளது. இதில் 5000mAh பேட்டரி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6 ஆயிரத்து 299 ரூபாயில் தொடங்குகிறது.

Redmi A2+: இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி RAM மற்றும் 64ஜிபி இன்டெர்நல் இணைக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 8MP டூயல் கேமரா மற்றும் போர்ட்ரெய்ட் மோட் மற்றும் 5MP செல்பீ கேமரா உள்ளது. 10W சார்ஜருடன் 5000mAh பேட்டரி உள்ளது. இதன் விலை ரூ.7,499 முதல் தொடங்குகிறது.

Tecno Spark 9: இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி RAM மற்றும் 64ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 13MP டூயல் கேமரா மற்றும் டூயல் ஃப்ளாஷ்லைட் மற்றும் 8MP செல்பீ கேமரா மற்றும் முன்பக்க ஃபிளாஷ் உள்ளது. இதில் 5000mAh பேட்டரி உள்ளது. இதன் விலை ரூ.6,999 முதல் தொடங்குகிறது.

 

Realme Narzo 50A Prime: இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி RAM மற்றும் 64ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் போர்ட்ரெய்ட் மோட் மற்றும் நைட் மோட் உடன் 50MP ஏஐ டிரிபிள் கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமரா உள்ளது. இதில் 5000mAh பேட்டரி உள்ளது. இதன் விலை ரூ.7,649 முதல்.

Redmi 12C: இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி RAM மற்றும் 128ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் போர்ட்ரெய்ட் மோட் மற்றும் நைட் மோட் உடன் 50MP ஏஐ டூயல் கேமரா மற்றும் 5MP செல்ஃபி கேமரா உள்ளது. 10W சார்ஜருடன் 5000mAh பேட்டரி உள்ளது. இதன் விலை ரூ.6,799 முதல் தொடங்குகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link