ரூபே கிரெடிட் கார்டு மூலம் யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் செய்யலாம்..! எப்படி தெரியுமா?
Google Pay மட்டுமல்லாமல் PhonePe, Paytm போன்ற முன்னணி UPI செயலிகள் Debit Card மூலமாக செய்யப்படும் UPI பணபரிவர்தனைக்கு மட்டுமே உதவுகின்றன. ஆனால் இனி பயனர்கள் RuPay கிரெடிட் கார்டு மூலமாக நேரடியாக UPI Payments செய்யலாம்.
ஏற்கனவே Axis Bank,Bank of Baroda, Canara Bank, HDFC Bank, Kotak Mahindra Bank, Punjab national Bank, Union Bank of India ஆகிய வங்கிகள் RuPay கிரெடிட் கார்டுகளை அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார்கள். வரும் நாட்களில் இந்த வங்கிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதேபோல முன்னனி VISA மற்றும் MasterCard போன்ற நிறுவனங்களின் கிரெடிட் கார்டு UPI பணபரிவர்தனைக்கு உதவாது. முதல் முறையாக RuPay இனி UPI பணப்பரிவர்த்தனை செய்ய உதவும்.
எப்படி RuPay Credit கார்டு சேர்ப்பது?
நீங்கள் உங்களின் வங்கி கணக்கை Google Pay செயலியில் சேர்ப்பது போலவே RuPay கிரெடிட் கார்டு சேர்ப்பதும் சுலபம். Google Pay ஆப் திறந்த அதில் ‘Settings’ பக்கத்திற்கு செல்லவும். அதில் ‘Set Up Payments method’ கிளிக் செய்து Add RuPay Credit Card கிளிக் செய்யவும்.
உங்களின் Credit Card'இன் கடைசி 6 எண், காலாவதியாகும் தேதி, பின் மற்றும் OTP போன்றவற்றை உள்ளிடவும். இதன் பிறகு உங்களின் RuPay கிரெடிட் கார்டு மூலமாக UPI Payments செய்யலாம். இதை பயன்படுத்த நீங்கள் Scanner, UPI ID, போன் நம்பர் அல்லது Barcode மூலம் பணப்பரிவர்த்தனை செய்யலாம்.