கிசுகிசு : நடிகர் கட்சியை பார்த்து பதட்டத்தின் உச்சத்தில் கட்சி நடத்தும் பழைய இயக்குநர்

Fri, 23 Aug 2024-2:02 pm,

நடிகரின் கட்சி கொடியேற்ற விழாவுக்கு போய்டு மதியம் நேராக டீ கடைக்கு போனான். அங்கு அவரை எதிர்பார்த்து காத்திருந்த மாஸ்டர், ஒரு டீயை சூடாக போட்டுக் கொடுத்து "விழா குறித்த விவரத்தை சொல்லுப்பா.. "என கேட்டார்.

முதல் சொட்டு டீயை வாயில் ஊற்றிக் கொண்டு கதையை ஆரம்பித்த குசும்பன், " அதுவாண்ணே..! விழா எல்லாம் நல்லா தான் போச்சு. அவரு சினிமாக்காரர் அப்படிங்கிறதால, வழக்கமா விழா ஏற்பாடு செய்யுற டீம் கிட்ட சொல்லி எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிட்டாங்க. ஆனந்தமானவர் தான் கொஞ்சம் டென்ஷனாவே சுத்திட்டு இருந்தாரு.

விழா ஏற்பாடு எல்லாம் அவரு தான் கவனிச்சாருங்கிறதால, ஏதும் சொதப்பிடக்கூடாதுங்கிறதுல கவனமா இருந்தாரு. பிளான்படி எல்லாம் நல்லா தான் போச்சு. விழாவுக்கு இடையில வாரிசு நடிகர் ஏதாச்சும் வாழ்த்துவாருன்னு ஆனந்தமானவர் எதிர்பார்த்தார். கண்ணீர் எல்லாம் கூட விட்டு பார்த்தாரு. ஆனால் எந்த பாராட்டும் வரல. அது கொஞ்சம் ஆனந்தமானவருக்கு வருத்தமாம். 

மேடையில பேசுன நடிகர் கூட பேசுறதுக்கு நிறைய விஷயம் இருந்தும் பெருசா ஒன்னும் பேசல. இதுக்கு அவரோட பிஸ்னஸ் தான் காரணம். ரெண்டு வாரத்துல ஒரு படம் வர்றபோவது. அதுக்கு ஏதும் இடைஞ்சல் வந்துடக்கூடாதுங்கிறதால சைலண்டா இருந்துக்கிட்டாரு. இன்னொரு பட வேலைகள் இருக்கிறதால அதுவரைக்கும் பொது அரசியல் பத்தி ஒரு வார்த்தைகூட பேசக்கூடாதுங்கிறது தான் நடிகரோட பிளான்.

அரசியல் மாநாட்டுக்கு இடம் கிடைக்காதது, அதுக்கு வந்த நெருக்கடிகள், எப்படி வந்துச்சுன்னு எல்லாம் நடிகருக்கு நல்லாவே தெரியும். இருந்தாலும் மாநாட்டுக்கான வேலைகள் நடந்துட்டு இருக்கு, சீக்கிரம் நல்ல முடிவை தலைமை சொல்லும்னு மட்டும் சொல்லிட்டு பேச்சை முடிச்சிக்கிட்டாரு. கொடி பாடல் நல்லாவே இருந்தாலும், கொடியை டிசைன் பண்ணது அவருக்கு சிக்கல உருவாக்கிடுச்சு.

சட்டரீதியா அந்த சிக்கல பார்த்துக்கலாம்ங்கிற முடிவில் இருக்கிறார் நடிகர். இருந்தாலும் சீக்கிரமா வரையக்கூடிய மாதிரி கொடியை டிசைன் பண்ணியிருக்கனும்ங்கிறது தான் எல்லோரும் சொல்லக்கூடிய விமர்சனம். 

கட்சி கொடியே நடிகருக்கு சிக்கலை உருவாக்கிடுச்சுங்கிறது தான் ஹைலைட். அதுபோக அவரு வந்துட்டு போன காருக்கு அபாரத தொகை வேற பெண்டிங்கில் இருக்கிறது சோஷியல் மீடியாவுல சர்ச்சையாக ஆளும் தரப்பு ஐடி விங் உருவாக்கி விட்டுட்டாங்க. இனி நடிகர் இதுல எல்லாம் கொஞ்சம் கவனமா இருக்கணும்.

இல்லைனா அவரோடு பாடு திண்டாட்டம் தான்" என குசும்பன் சொல்லிட்டு இருக்கும்போது குறுக்கிட்ட டீ மாஸ்டர், "நடிகருக்கு அரசியல் ஆலோசனை சொல்றது இருக்கட்டும் பா... முன்னாள் இயக்குநர் கூடாரத்துல கொஞ்சம் சலசலப்பா இருக்கே, அது என்ன?" என கேட்டார்.

" அட.... ஆமாம்ணே, நல்ல வேளையா ஞாபகப்படுத்திட்டீங்க. 10 வருஷமா கட்சி நடத்துற அந்த முன்னாள் இயக்குநர், நடிகர் அரசியலுக்கு வர்றத்துக்கு முன்னால.. என்கூட எல்லாம் அவர போய் இணைச்சு பேசுறீங்களேன்னு சொல்லிட்டு இருந்தாப்ல. இப்போ கட்சி ஆரம்பிச்சதும் நடிகர தன் பக்கம் இழுக்க முயற்சி பண்றாப்ல.

ஏன்னா, இவருகிட்ட இருக்கிறது பூரா முதல் தலைமை வாக்காளர்கள். இயக்குநர் பேச்சுல மயங்கி ஓட்டுபோட்டுட்டு இருந்தாங்க. இப்போ அந்த வோட்டு எல்லாம் நடிகர் பக்கம் சாஞ்சிருமோன்னு பயத்துல இருக்கிறாரு. இதுல இன்னொரு விஷயமும் இருக்கு. நாளைக்கு விலாவரியா சொல்றேன்" என டீயையும் குடித்து முடித்து, கதையை முடித்தான் குசும்பன். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link