GPF Interest Rate: பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டது, இதோ விவரம்

Sat, 15 Jun 2024-11:10 am,

நாட்டில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி தலைமையிலான எண்டிஏ அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளது. இனி வரும் நாட்களில் அரசிடமிருந்து பல அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். மக்களும் பல முக்கியமான அறிவிப்புகளுக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள்.

அரசு சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகளின் ஒரு பகுதியாக பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் அது தொடர்பான நிதிகளுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றாமல் அப்படியே வைத்துள்ளது. 

பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் தற்போது மாற்றப்படாத நிலையில், தொடர்ந்து 17வது காலாண்டாக பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

நிதி அமைச்சகம் ஜூன் 10 அன்று வெளியிட்ட அறிக்கையில், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதிகளின் வட்டி விகிதங்கள் மாற்றப்படாமல் 7.1 சதவீதமாக முந்தைய விகிதங்களிலேயே தொடரும் என்று கூறியுள்ளது. இந்த வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1, 2024 முதல் அமலுக்கு வரும்.

நிதி அமைச்சகம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதங்களை மாற்றுகிறது. ஆனால் 17வது காலாண்டில் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பொது வருங்கால வைப்பு நிதி என்பது நாட்டின் கோடிக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிந்தைய சேமிப்புக்கான சிறப்பு ஓய்வூதியத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் மாதச் சம்பளத்தில் குறைந்தபட்சம் 6% மற்றும் அதிகபட்சம் 100% வரை டெபாசிட் செய்யலாம். 

2004 ஆம் ஆண்டுக்கு முன்பிலிருந்து பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும். இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் 15 ஆண்டுகள் பணி முடித்த பிறகு அல்லது ஓய்வு பெற்ற பிறகு நிதியை எடுத்துக்கொள்ளலாம். 

GPF தவிர, இந்த நிதிகளுக்கான வட்டி விகிதங்களையும் அரசாங்கம் மாற்றாமல் அப்படியே வைத்துள்ளது: பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய ஊழியர்கள் மட்டுமே இதில் பங்களிக்க முடியும்), பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி, அகில இந்திய சேவை வருங்கால வைப்பு நிதி, மாநில ரயில்வே வருங்கால வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி (இராணுவ சேவை), இந்திய ஆயுதத் துறை வருங்கால வைப்பு நிதி, இந்திய ஆயுதத் தொழிற்சாலை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, இந்திய கடற்படை கப்பல்துறை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, பாதுகாப்பு சேவை அதிகாரி வருங்கால வைப்பு நிதி, இராணுவ சேவை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link