புதன் பெயர்ச்சியால் பிப்ரவரியில் இந்த ராசிகள் வாழ்வில் பெரிய மாற்றம், நற்பலன்கள் கிடைக்கும்
புதன் பிப்ரவரி 7 ஆம் தேதி இரவு 7.38 மணிக்கு புதன் தனது ராசியை மாற்றுகிறார். இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு அபரிமிதமான நல்ல பலன்கள் கிடைக்கவுள்ளன. புதனின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ராசி மாற்றம் மிகவும் சாதகமாக அமையப் போகிறது. புதிய வேலையைத் தேடுபவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மகர ராசிக்காரர்களுக்கு புதன் கிரகம் நல்ல செய்திகளையும் மகிழ்ச்சி மழையையும் கொண்டு வரும். வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயிக்கப்படும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.
நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இப்போது மீண்டும் கிடைக்கும். இந்த காலத்தில் உங்கள் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள ரிஷப ராசிக்காரர்கள் வணிகம் தொடர்பான பயணத்தை மேற்கொள்ளலாம்.
கிரகங்களின் அதிபதியான புதன் கும்ப ராசிக்கு 12வது வீட்டில் நுழைவார். இது புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும். இது பொருளாதார நிலைமையை வலுப்படுத்த உதவும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் இருந்து ஆதரவு கிடைக்கும்.
புதன் மாற்றத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மிளிரும். இந்த காலத்தில் வாகனம், சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.