சனி வக்ர நிவர்த்தி: தீபாவளிக்கு பின் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், பொற்காலம் பிறக்கும்
ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. ராசிகள் தவிர, கிரங்களின் நட்சத்திரம், உதய அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என இன்னும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவர் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ளார். அவரது சிறிய அசைவுகளுக்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன.
சனி பகவான் தற்போது வக்ர நிலையில் இருக்கிறார். அவர், தீபாவளிக்கு பிறகு, நவம்பர் 15 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
சனி வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்கள் வாழ்வில் பொற்காலம் பிறக்கும். தீபாவளிக்கு பிறகு நிகழும் சனி வக்ர நிவர்த்தி இந்த ராசிகளை வெற்றியின் உச்சம் தொட வைக்கும்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. வேலை தேடிக்கொண்டு இருக்கும் மேஷ ராசுக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகமாகும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் வக்ர நிவர்த்தி நன்மை பயக்கும். இரும்பு, எண்ணெய் சம்பந்தப்பட்ட வேலைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். குடும்ப உறவுகளும் வலுவடையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணி இடத்தில் நல்ல பெயர் கிட்டும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
கன்னி: சனி வக்ர நிவர்த்தியின் தாக்கத்தால் கன்னி ராசிக்காரர்களின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். நீதிமன்றம் தொடர்பான ஏதேனும் வழக்குகள் நடந்து கொண்டிருந்தால் அவற்றில் வெற்றி கிடைக்கும். வசதிகள் பெருகும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் வக்ர நிவர்த்தியால் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். இவர்களுக்கு நிதி ஆதாயம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு சனியின் அருளால் நல்ல வேலை கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த வாய்ப்புகள் அதிகரிக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா ஆகியவற்றை பாராயணம் செய்யலாம். ஏழை எளியவர்களுக்கும், நலிந்தோருக்கும் உதவும் நபர்களையும் சனி பகவான் கைவிடுவதில்லை.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.