குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அரசனை போல ராஜாதி ராஜ வாழ்க்கை
மேஷம்: ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பு ஆசிகளைப் பொழிவார். செல்வ வீட்டில் குரு அமர்ந்திருப்பார். இதனால் வருமானம் கூடும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். எனினும் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். பணவரவு கூடும். சிக்கிய பணத்தை மீட்க முடியும். ஜோதிட ஆலோசனையைப் பெற்று முதலீடு செய்யவும். இதனால் லாபத்தை பெறுவீர்கள்.
சிம்மம்: சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். இந்த ராசிக்காரர்களுக்கு விஷ்ணு பகவானின் அருள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் பெறமுடியாமல் இருந்த பணத்தை திரும்பப் பெறலாம்.
கன்னி: குரு ராசி மாற்றத்தால் நற்பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டமும் பிரகாசிக்கும். தற்போது கன்னி ராசியிலும் கேது அமைந்துள்ளதால், பண வரவு அமோகமாக இருக்கும். பல பரிமாணங்களில் இருந்து செல்வம் வந்து சேரும்.
மகரம்: குரு பெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். தடைபட்ட வேலைகள் மேல் 1 ஆம் தேதிக்கு பிறகு வெற்றிகரமாக நடைபெறம். நிதி நிலை முன்னேற்றம் பெரும்.
மீனம்: குரு பெயர்ச்சியால் பணி இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வும் பெறலாம். வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைவீர்கள். கஷ்ட காலம் முடிவுக்கு வரும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தியை பெறுவீரக்கள். ஆரோக்கியம் மேம்படும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.