வீட்டில் முதியவர்கள் இருந்தால்... இந்த FD திட்டத்தை உடனே போடுங்க - அதிக வட்டி கிடைக்கும்!
)
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank Of India) புதிய நிலையான வைப்புத் தொகை திட்டம் (Fixed Deposits) ஒன்றை சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு என பிரத்யேகமாக கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் பெயர் SBI Patrons ஆகும். வழக்கமான FD திட்டங்களை விட இதில் என்னென்ன கூடுதல் நன்மைகள் இருக்கின்றன என்பதை இங்கு காணலாம்.
)
SBI Patrons நிலையான வைப்புத் தொகை திட்டம் என்பது 80 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு என பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள திட்டமாகும். இதில் வழக்கமாக, மூத்த குடிமக்களுக்கு (60 - 79 வயது) வழங்கப்படும் வட்டி விகிதங்களை விட அதிகமாக வழங்கப்படுகிறது.
)
1961, வருமான வரி சட்டத்தின் 194P பிரிவின்படி, 80 வயது அல்லது 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் சூப்பர் சீனியர் குடிமக்கள் என்றழைக்கப்படுகிறார்கள். அப்படியிருக்க, மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தில், சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு 10 அடிப்படை புள்ளிகள் கூடுதலாகவே இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது.
சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு SBI Patrons நிலையான வைப்புத்தொகை திட்டத்தின் கீழ் 4.10% முதல் 7.60% வரை வட்டி விகிதமாக வழங்கப்படுகிறது. ஓராண்டு FD திட்டத்திற்கு ரூ.7.4% மற்றும் 5 ஆண்டு FD திட்டத்திற்கு ரூ.7.6% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.3 கோடி வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச தொகை ரூ.1000 ஆகும்.
SBI Patron நிலையான வைப்புத்திட்டத்தில், 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரை நீங்கள் டெபாசிட் செய்துகொள்ளலாம். ஒருவேளை நீங்கள் நிர்ணயித்த காலத்திற்கு முன்னதாகவே உங்களுக்கு பணம் தேவைப்படாலும் நீங்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதற்கு வழக்கம் போல் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும்.
80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர் யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். தனியாகவும், கூட்டு கணக்காகவும் கூட இதில் கணக்கு தொடங்கலாம்.
SBI Patron நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் நீங்கள் ரூ.10 லட்சத்தை, 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் மொத்தம் 4 லட்சத்து 57 ஆயிரத்து 81 ஆயிரம் ரூபாய் வட்டி கிடைக்கும். அதாவது மொத்தமாக 5 ஆண்டுகளுக்கு பின் 14 லட்சத்து 57 ஆயிரத்து 81 ரூபாயை பெறுவீர்கள். மாதாமாதம் உங்களுக்கு 6,333 ரூபாய் கிடைக்கும்.