Uric Acid: எகிறும் யூரிக் அமிலத்தை விரட்டி அடிக்கும் சில மேஜிக் இலைகள்
சிறுநீரகங்கள் உடலில் உள்ள பியூரின்களை உடைக்கும் போது யூரிக் அமிலம் என்னும் கழிவு உருவாகிறது. யூரிக் அமிலம் பொதுவாக சிறுநீர் வழியாக உடலில் இருந்து வெளியேறும் என்றாலும் யூரிக் அமில அளவு உடலில் அதிகரிக்கும் போது, அவை முழுமையாக வெளியேறாமல், மூட்டுகளில் படிவங்களாக சேர்ந்து வலியை உண்டாக்குகின்றன.
யூரிக் அமில அளவு பெண்களில் 6 mg/dL என்ற அளவை விட அதிகமாகவும், ஆண்களில் 7 mg/dL என்ற அளவை விட அதிகமாகவும் இருப்பது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. இதனால் மூட்டுவலி மட்டுமின்றி, சிறுநீரக கற்கள், இதய நோய்கள் போன்ற பல கடுமையான நோய்களின் அபாயன் அதிகரிக்கிறது.
கொத்தமல்லி: ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ள கொத்தமல்லி யூரிக் அமில படிகங்களை கரைக்கும் ஆற்றல் பெற்றது. உடலை டீடாக்ஸ் செய்யும் ஆற்றல் கொண்ட கொத்தமல்லி, சிறுநீரக கற்கள் அபாயத்தை குறைக்கிறது. கொத்தமல்லி இலைகளை சாலட், தயிர் அல்லது கொத்தமல்லியில் சட்னியில் சேர்த்து அரைத்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வெற்றிலை: உடலின் பல பிரச்சினைகளுக்கு வெற்றிலை தீர்வாக அமைகின்றது வெற்றிலை. அதில் ஒன்று யூரிக் அமிலம், இரத்தத்தில் உள்ள யூரிக் அமில படிகங்களை அகற்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெற்றிலைச் சாற்றினை எலிகளுக்கு கொடுத்து நடத்தப்பட்ட பரிசோதனயில், யூரிக் அமிலத்தின் அளவு சிறப்பாக கட்டுக்குள் வந்துள்ளது ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
துளசி இலை: ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ள துளசி இலைகள் யூரிக் அமில அளவைக் குறைக்கவும், மூட்டு வலியைக் குறைக்கவும் உதவுகின்றன. துளசி இலைகளை உட்கொள்வதால் உடலில் சேரும் பிற வகை அழுக்குகள் மற்றும் கழிவுப்பொருட்கள் நீங்கும். துளசி இலைகளின் சாறு அல்லது கஷாயம் குடிப்பது நன்மை பயக்கும்.
பாகற்காய் இலை: பாகற்காய் இலைகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல, யூரிக் அமிலத்தைக் குறைப்பதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாகற்காய் சாறு குடிப்பது யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும். பாகற்காய் ஜூஸ் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடலை டீடாக்ஸ் செய்யவும் உதவுகிறது.
முருங்கைக்கீரை: ஆரோக்கியத்தின் பொக்கிஷமாக விளங்கும் முருங்கை கீரை அல்லது முருங்கை அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்கிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் செல்களை சேதப்படுத்தி வீக்கத்தை ஊக்குவிக்கின்றன. ஆகையால் முருங்கைக்கீரையை குடிப்பது யூரிக் அமிலத்தை குறைக்க உதவுகிறது.
வெந்தயக் கீரை: வெந்தய கீரைகள் யூரிக் அமிலத்தைக் குறைக்கும் ஒரு இயற்கை மருந்தாகும். ஏனெனில், யூரிக் அமில படிகங்கள் உருவாவதைத் தடுக்க உதவும் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அவற்றில் உள்ளன. வெந்தய கீரைகளை உங்களுக்கு பிடித்த வகையில் உணவில் சேர்க்கலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.