RapidX நாளை முதல் தொடங்கும்! டெல்லி-மீரட் வழித்தடத்தில் இயங்கும் அதிவிரைவு ரயில்

Thu, 19 Oct 2023-9:21 pm,

RAPIDX ரயில்கள் பிரதமர் மோடியின் “மேக் இன் இந்தியா” மற்றும் “ஆத்ம நிர்பார் பாரத்” முயற்சிகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும். இந்த தடத்தில் நாளை முதல் ரயில் இயங்கத் தொடங்கும்.

டெல்லி-காசியாபாத்-மீரட் RRTS நடைபாதையானது ஆண்டுக்கு 2,50,000 டன்களுக்கு மேல் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இதனால் மிகவும் ஆற்றல் திறன் கொண்ட போக்குவரத்து அமைப்பாக இது இருக்கும். 

இந்தியாவில் கவச் தொழில்நுட்பம் மற்றும் புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ரேபிட் எக்ஸ் ரயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஐந்து நிலையங்களில் சேவையை தொடங்கும் ரேபிட் எக்ஸ் ரயில், சாஹிபாபாத், காசியாபாத், குல்தார், துஹாய் மற்றும் துஹாய்-டிப்போ ஆகிய ரயில் நிலையங்களை இணைக்கும்.   

ரயில் சேவைகள் 15 நிமிட இடைவெளியில் கிடைக்கும் மற்றும் இது மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும்.

இருபுறமும் முதல் ரயில் காலை 6 மணிக்கும், கடைசி ரயில் இரவு 11 மணிக்கும் இயக்கப்படும்

ஒவ்வொரு RapidX ரயிலிலும் 6 பெட்டிகள் உள்ளன, அதில் சுமார் 1700 பயணிகள் ஒன்றாகப் பயணிக்க முடியும். ஒவ்வொரு ஸ்டாண்டர்ட் கோச்சிலும் 72 இருக்கைகளும், பிரீமியம் கோச்சில் 62 இருக்கைகளும் உள்ளன.  

ரயிலில் ஒரு பெட்டி பெண்களுக்காக ஒதுக்கப்படும். ரயிலின் மற்ற பெட்டிகளிலும் பெண்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, ஒவ்வொரு பெட்டியிலும் மாற்றுத்திறனாளிப் பயணிகள்/மூத்த குடிமக்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link