குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு ஆரம்பமானது கோடீஸ்வர குபேர ராஜயோகம்
மேஷம் - குரு பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகரிக்கும். சிலருக்கு முழங்கால் வலி, மூட்டு வலி ஆகியவை ஏற்படலாம். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. மனதில் தைரியம் குறையும். எதிரிகளை இனம்கண்டு ஒதுக்குவீர்கள்.
ரிஷபம் - குரு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு செய்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். பெயரும், புகழும், அந்தஸ்தும் அதிகரிக்கும். சிறு தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியர்கள் அடங்கிவிடுவார்கள்.
மிதுனம் - குரு பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு வருமானம் சீராக இருக்கும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட மனத்தாங்கல்கள் நீங்கும். சலுகைகள் கிடைக்கும். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும். புதிய சந்தைகளில் உங்கள் பொருட்கள் விற்பனையாகும்.
கடகம் - குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய செயல்களுக்கு அஸ்திவாரம் போடுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் அதிகரிக்கும். பெண்மணிகளுக்கு புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம் - குரு பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக பலன் கிடைக்கும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும். மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். பொருளாதார நிலையில் எந்தக் குறைவும் ஏற்படாது. பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.
கன்னி - குரு பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை உயரும். எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பதவி முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். உங்கள் படிப்புக்கு அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த மானியங்கள் கிடைக்கும்.
துலாம் - குரு பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். பாராட்டும், பணமும் ஒருங்கே கிடைக்கும். பொருளாதார வசதிகள் பெருகவும் வாய்ப்பான காலமிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். தேவையில்லாத பேச்சுவார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம் - குரு பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும். வீடு, வாகனம் ஆகியவற்றை வாங்குவீர்கள். பொருளாதார நிலைமை சீரடையும். பண வரவு சரளமாகவே இருக்கும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு - குரு பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு தாய் வழி உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் நலத்தில் கவனமாக இருக்கவும். மற்றபடி உங்கள் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சியை அடைவீர்கள்.
மகரம் - குரு பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு மந்தமான நிலை மாறும். தவறு செய்பவர்களிடம் கூட்டு சேர வேண்டாம். பண வசதிக்கு எந்தக் குறைவும் ஏற்படாது. வெளியூர் பயணங்களைச் செய்வீர்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
கும்பம் - குரு பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு பொருளாதாரம் சீராக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பல இனங்களிலிருந்து வருமானம் வரத் தொடங்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாகவும் பக்கபலமாகவும் நடந்துகொள்வார்கள்.
மீனம் - குரு பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். தடைபட்ட வேலைகள் வேகம் பெறும். உடற்பயிற்சி செய்வது முக்கியம். நீண்ட காலமாக இருந்த கஷ்டங்கள் நீங்கி ஏற்றம் உண்டாகும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.