குரு வக்ர நிவர்த்தி... இந்த ராசிகளுக்கு இனி எல்லாம் சுகமே... கவலையை விடுங்கள்
)
ஜோதிடத்தில், பெயர்ச்சிகளை போலவே, வக்ர நிலையில், வக்ர நிவர்த்தியும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்நிலையில், கடந்த 09 அக்டோபர் 2024 அன்று வக்ர நிலையை அடைந்த குரு பகவான், 04 பிப்ரவரி 2025 அன்று பிற்பகல் 03:09 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால், சில ராசிகள் அதிர்ஷ்டத்தை குறைவில்லாமல் பெறுவார்கள்.
)
மேஷ ராசியினருக்கு குரு பக்வானின் வக்ர நிவர்த்தியினால் நிதி நிலைமை மேம்படும். பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொத்து சம்பந்தமான விஷயங்களும் தீர்க்கப்படும். வேலை தொழில் மற்றும் வியாபார ரீதியாக முன்னேறுவார்கள். அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவார்கள்.
)
ரிஷபம் ராசிக்காரர்கள் குரு பகவானின் வக்ர நிவர்த்தியினால், தங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள். கல்வி தொடர்பான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும்.
கன்னி ராசியினருக்கு குரு பகவானின் அனுகூல தாக்கத்தால் நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் நிறைவேறும். எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிகச் செயல்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில், குருவின் வக்ர நிவர்த்தி பல சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திருமண வாழ்க்கை முன்பை விட சிறப்பாக இருக்கும். மனநல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள்.
மீன ராசிக்காரர்களுக்கு குரு பகவான் சுப பலன்களை வழங்குவார். வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் கொண்டாட்ட சூழ்நிலை இருக்கும். பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. சகோதர சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வேலையில், தொழிலில் சில பெரிய சாதனைகளை அடையலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.