ஆப்கானிஸ்தானில் கிணற்றில் 3 நாட்களாக சிக்கியிருந்த 6 வயது ஹைதர் மரணம்
மீட்கப்பட்ட சிறுவனுக்கு மூச்சு இருந்தது. மருத்துவக் குழு அவருக்கு ஆக்ஸிஜனைக் கொடுத்தது என்று ஜாபுல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா ஜவ்ஹர், AFP இடம் தெரிவித்தார். மருத்துவக் குழுவினர் அவரை ஹெலிகாப்டரில் ஏற்றிச் செல்ல முயன்றபோது அவர் உயிரிழந்தார்” என்று அவர் மேலும் கூறினார். (Photograph:AFP)
25-மீட்டர் தண்டு ஆழமான துளை ஷோகாக் கிராமத்தில் அமைந்துள்ள கிணற்றில் சிறுவன் தவறி விழுந்தார். செவ்வாய்க்கிழமையன்று சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஹைதர், கால் தவறி கிணற்றில் விழுந்தார்.
25 மீட்டர் நீளமுள்ள ஒரு குறுகிய துளையின் அடிப்பகுதியில் தவறி விழுந்த ஹைதரால் நகர முடியவில்லை. (Photograph:AFP)
ஹைதருக்குச் செல்வதற்காக, மீட்புக் குழு தரையில் ஒரு பள்ளம் தோண்ட வேண்டியிருந்தது. இருப்பினும், ஹைதர் வெளியேற்றப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு, அவர் தொடர்புகொள்வதை நிறுத்திவிட்டார். (Photograph:AFP)
மீட்பு பணி நிறைவடைந்த சிறிது நேரத்திலேயே, தலிபான் உள்துறை அமைச்சக மூத்த ஆலோசகர் அனஸ் ஹக்கானி "மிகவும் வருத்தத்துடன், இளம் ஹைதர் எங்களை விட்டு என்றென்றும் பிரிந்துவிட்டார்" என்று ட்வீட் செய்துள்ளார்,
(Photograph:AFP)
"நல்லா இருக்கியா மகனே?" சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ காட்சி ஒன்றில் அவரது தந்தை, "நல்லா இருக்கியா மகனே?" என்று கேட்டு அழும் காட்சி வைரலாகிறது.