கூந்தல் உதிரும் பிரச்சனையா? இவைதான் காரணம், இக்னோர் பண்ணாதீங்க
7 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம் உங்கள் எடையை மோசமாக பாதிக்கும். அதோடு, முடி உதிர்தலுக்கும் வழிவகுக்கும். ஆகையால், 7 மணி நேரம் தூங்குவதை கண்டிப்பாக கட்டாயமாக்கிக்கொள்ளுங்கள்.
உங்கள் தலைமுடியை வெந்நீர் கொண்டு கழுவினால், முடி உதிர்தல் தொடங்கும், பொடுகுத் தொல்லையும் உண்டாகும். ஆகையால் வெதுவெதுப்பான நீர் கொண்டே கூந்தலை கழுவவும்.
இரும்புச்சத்து, வைட்டமின்-ஏ, சி மற்றும் துத்தநாகம் ஆகியவை முடி உதிர்தலுக்கு காரணமான கூறுகளாகும். உங்களுக்கு முடி உதிர்வு இருந்தால், முதலில் நீங்கள் இந்த கூறுகளை அதிகம் எடுத்துக்கொள்கிறீர்களா என்பதை ஆராயவும். இது தவிர அடிக்கடி ஜங்க் ஃபுட் உண்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ப்ளோ ட்ரையரின் பயன்பாடு காரணமாக உருவாகும் வெப்பம் உங்கள் தலைமுடியை சேதப்படுத்துகிறது மற்றும் அது முடி உடைவதற்கு வழிவகுக்கிறது. நீங்கள் உங்கள் தலைமுடியை விரைவாக உலர்த்த வேண்டியிருந்தாலும், முடி குறைந்தது 60-70 சதவிகிதம் உலரும் வரை காத்திருக்கவும், அதன் பிறகு உங்கள் தலைமுடியை ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து ப்ளோ செய்யவும்.
நீங்கள் சிறிய விஷயத்துக்கெல்லாம் அழுத்தம் கொண்டால், அந்த மன அழுத்தமும் முடி உதிர்வுக்கு காரணமாகும். நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது, உங்கள் உடல் சரியாக வேலை செய்யாது, முடிக்கு தேவையான சத்து கிடைக்காமல் கேசம் பலவீனமாகிவிடும். இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.