முடி அதிகம் உதிர்கிறதா? செலவே இல்லாத எளிய வீட்டு வைத்தியங்கள் பலன் தரும்!
முடி உதிர்தல் என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். மன அழுத்தம், உணவு பழக்கம், முடிக்கு கெமிக்கல் சேர்ப்பது போன்றவற்றால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.
இதனை சரி செய்ய பல மருத்துவ சிகிச்சைகள் இருந்தாலும், சில இயற்கை வைத்தியங்கள் இதற்கு உதவுகின்றன. இதன் மூலம் இழந்த முடியை மீண்டும் பெறலாம்.
வெங்காயச் சாறு: வெங்காயச் சாற்றில் உள்ள கந்தகம் முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. வெங்காய சாற்றை உங்கள் உச்சந்தலையில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். பிறகு ஷாம்பு கொண்டு கழுவவும்.
தேங்காய் பால்: தேங்காய் பால் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. இதற்கு தேங்காய்ப் பாலை உங்கள் உச்சந்தலையில் வேர் வரை நன்கு தடவி பிறகு, குளிர்ந்த நீரில் கழுவவும்.
அலோ வேரா ஜெல்: கற்றாழை உச்சந்தலையில் உள்ள வீக்கத்தைக் குறைத்து, முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. 30 நிமிடம் ஊறவைத்து பிறகு ஷாம்பு கொண்டு கழுவவும்.
முட்டையின் மஞ்சள் கரு: முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள புரதம் மயிர்க்கால்களை வலுப்படுத்த உதவுகிறது. ஆலிவ் எண்ணெய் அல்லது தேனுடன் மஞ்சள் கருவை கலந்து முடியில் தடவி பிறகு கழுவவும்.