முடி அதிகம் கொட்டுகிறதா? வெங்காய சாற்றை இந்த வழிகளில் பயன்படுத்தலாம்!
தற்போது பலருக்கும் முடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இதற்காக பெரிதாக செலவு செய்ய வேண்டியதில்லை. வெங்காய சாற்றின் மூலம் சரி செய்யலாம்.
வெங்காயம் மந்தமான முடி மற்றும் வறண்ட உச்சந்தலையை சரி செய்ய உதவுகிறது. மேலும் முடியை ஈரப்பதத்துடன் வைத்து கொள்கின்றன. இவை சிறந்த முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
வெங்காய சாறு மயிர்க்கால்கள் வரை சென்று முடியை வலுப்படுத்துகிறது. இவற்றை நேரடியாக முடியில் தடவும் போது, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நேரடியாக முடி வளர்ச்சிக்கு நல்ல சூழலை உருவாக்குகிறது.
மன அழுத்தம், மரபணுக்கள் போன்றவற்றின் காரணமாக நரை முடி பிரச்சனை ஏற்படலாம். இந்த பிரச்சனைகளுக்கு வெங்காய சாற்றை பயன்படுத்தப்படலாம். முடியின் நிறம் மங்குவதை கட்டுப்படுத்துகிறது.
வெங்காயம் தலையில் உள்ள பொடுகு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது. வெங்காய சாற்றில் உள்ள வைட்டமின்கள் நீரேற்றமாக இருக்க உதவுகிறது.
வெங்காயச் சாற்றில் அதிக கந்தகம் உள்ளது. இது பிரபலமான மருந்துகளில் ஒன்றாகு. இது முடி உதிர்வை கட்டுப்படுத்த பயன்படுகிறது. வெங்காய சாறு மற்றும் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.