ஒரு படத்திற்கு அனிருத் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?
சமீபத்தில் வெளியான லியோ, விக்ரம், ஜெயிலர், வேட்டையன், ஜவான் என அனைத்து வெற்றி படங்களிலும் அனிருத் முக்கிய ஒருவராக இருந்துள்ளார். அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் உள்ள சூப்பர் ஸ்டார் படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். அனிருத் இசையில் வரும் பாடல்கள் படங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
அனிருத் 2011ம் ஆண்டு வெளியான வை திஸ் கொலவெரி டி பாடல் மூலம் பிரபலமடைந்தார். பின்பு 2014ம் ஆண்டு விஜய் நடித்த கத்தி படத்திற்கு இசையமைத்து புகழ் பெற்றார்.
அனிருத் இதுவரை இரண்டு பிலிம்பேர் விருதுகள், 9 SIIMA விருதுகள், 6 எடிசன் விருதுகள் மற்றும் 5 விஜய் விருதுகள் ஆகியவற்றை வென்றுள்ளார். மேலும் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளையும் செய்து வருகிறார்.
தற்போது ஒரு படத்திற்கு இசையமைக்க அனிருத் ரூ. 10 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஆஸ்கார் விருது பெற்ற ஏஆர் ரஹ்மான் ஒரு படத்திற்கு ரூ. 8 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
அனிருத் இசையில் சமீபத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்த தேவாரா படம் வெளியானது. அடுத்ததாக விடாமுயற்சி, தளபதி 69, LIK போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.