Happy birthday: பிறந்த நாள் காணும் பிரபாஸ் பற்றிய சுவராசியமான செய்திகள்!
1979ஆம் ஆண்டு அக்டோபர் 23ம் நாள் சென்னையில் பிறந்தார் பிரபாஸ்.
'பாகுபலி' படத்தின் மூலம் உலகம் முழுவதும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய நடிகர் பிரபாஸ் இன்று தனது 42 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
'பாகுபலி' படத்திற்குப் பிறகு, தென்னிந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் புகழ் பெற்ற நடிகராக மாறினார் பிரபாஸ்
'பாகுபலி' படப்பிடிப்பின் போது 6 ஆயிரம் பெண்கள் அவரை திருமணம் செய்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தனர்…
6 ஆயிரம் பெண்களின் திருமணக் கோரிக்கைகளை பிரபாஸ் நிராகரித்தாலும், பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி விவகாரம் பற்றிய செய்திகள் அடிக்கடி ஊடகங்களில் வருகின்றன. சாஹோ படத்துக்கு அனுஷ்காவின் பெயரை பிரபாஸ் சிபாரிசு செய்திருந்தார். ஆனால் உடற்பருமன் காரணமாக, தயாரிப்பாளர்கள் ஷ்ரத்தா கபூரை நடிக்க வைத்தனர்.