பதிரானா வந்தாச்சு... இனி சிஎஸ்கேவில் `இந்த` பிரச்னை இருக்காது - வெளியேறப் போவது யாரு?

Sun, 24 Mar 2024-1:24 am,

கடந்த வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தோற்கடித்தது.

 

 

ஆர்சிபி அணிக்கு எதிரான முதல் போட்டியில் பதிரானா காயம் காரணமாக தவறவிட்ட நிலையில், அந்த போட்டியில் அவருக்கு பதிலாக களம் கண்ட வங்கதேச இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் 4 முக்கிய விக்கெட்டுகளை தூக்கி, ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.

 

சிஎஸ்கே அணி தனது அடுத்த போட்டியில் குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணியை சென்னை சேப்பாக்கத்தில் வரும் செவ்வாய்கிழமை (மார்ச் 26) அன்று சந்திக்க உள்ளது. அதற்கு முன்னதாக, தற்போது மதீஷா பதிரானா காயத்தில் இருந்து மீண்டு இன்று சிஎஸ்கே அணியுடன் சென்னையில் இணைந்துள்ளார். 

மதீஷா பதிரானா சிஎஸ்கே அணியில் இணைந்திருப்பதால் அவர் நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார், இதனால் ஒரு வெளிநாட்டு வீரரை வெளியே அமரவைக்க வேண்டும். முஸ்தபிசுர் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடியிருப்பதால் அவரை தூக்குவது நடக்காத காரியம். இதனால், மேலும், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் பேட்டிங் ஆர்டரில் நன்கு செட்டாகிவிட்டனர். 

 

எனவே, தீக்ஷனாவை தூக்கினால் மட்டுமே பதிரானாவை உள்ளே கொண்டு வர முடியும். தீக்ஷனா மிஸ்டரி ஸ்பின்னர் என்றாலும் கடந்த போட்டியிலும், கடந்த சீசனிலும் சரி சற்று திணறியிருக்கிறார். கடந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி 36 ரன்களை கொடுத்திருந்தார், விக்கெட் ஏதும் இல்லை. தீக்ஷனாவை தூக்கினால் அவருக்கு பதில் ரச்சின் ரவீந்திரா 4 ஓவர்களை போடலாம். 

 

ரச்சின் ரவீந்திராவும் ஜடேஜா போன்றே இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என்பதால் அவரை வீசவைப்பதை விட காம்பினேஷனை சமமாக்க தீக்ஷனா உடன் துஷார் தேஷ்பாண்டேவையும் தூக்கிவிட்டு, இந்திய வேகப்பந்துவீச்சாளர் தேஷ்பாண்டேவுக்கு பதில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் பிரசாந்த் சோலன்கியையும், வெளிநாட்டு சுழற்பந்துவீச்சாளருக்கு பதில் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் பதிரானாவையும் சிஎஸ்கே விளையாட வைக்கலாம். 

 

முஸ்தபிசுர் பவர்பிளேவிலும் ஓவர்களை வீசக்கூடியவர். தீபக் சஹார் பவர்பிளேவில் பந்துவீச அவருக்கு துணையாய் முஸ்தபிசுர் 2 ஓவர்களை வீசலாம். மிடில் ஓவர்களில் ஜடேஜா, ரச்சின் ரவிந்திரா, சோலன்கி ஆகியோர் சூழலுக்கு ஏற்ப வீசவைத்து, 13ஆவது ஓவரில் பதிரானாவை கொண்டு வரலாம். டெத் ஓவர்களில் பதிரானாவும், முஸ்தபிசுர் ரஹ்மானும் சிறப்பாக வீசலாம். கடந்த போட்டியில் டெத் ஓவரில் தேஷ்பாண்டே ரன்களை வாரி வழங்கினார். 

 

Impact Player ஆக கூட ஷர்துல் தாக்கூர், தேஷ்பாண்டே ஆகியோரை முயற்சிக்கலாம். இது இன்னும் சிஎஸ்கேவை பந்துவீச்சில் பலமாக்கும். இது சேப்பாக்கத்தில் மட்டுமின்றி விசாகப்பட்டினம், ஹைதராபாத் என சிஎஸ்கே அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடும் இடங்களிலும் உதவிக்கரமாக இருக்கும்.   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link