இதை செய்தால் தான் டி20 உலக கோப்பையில் தேர்வு! ஹர்திக்கிற்கு பிசிசிஐ நிபந்தனை!
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 போட்டி ஹர்திக் பாண்டியாவிற்கு பெரும் சோதனைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவரது டி20 உலக கோப்பை இடம் கேள்விக்குறி ஆகி உள்ளது.
ஹர்திக் பாண்டியா இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 26.20 சராசரியில் 131 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். மேலும் பந்துவீச்சில் மோசமான பார்மில் உள்ளார். ரன்களை வாரி வழங்கி வருகிறார்.
இந்நிலையில் ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்துவீசினால் மட்டுமே அவருக்கு உலக கோப்பை அணியில் இடம் என்று பேசப்பட்டுள்ளது. இதனால் அவர் இனி வரும் போட்டிகளில் அதிகம் பந்து வீசுவார்.
ஐபிஎல் 2024ல் இதுவரை ஹர்திக் பாண்டியா 6 போட்டிகளில் 11 ஓவர்கள் பந்துவீசி உள்ளார். அதில் வெறும் வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் 12.00 என்ற எகானமி ரேட்டில் மோசமாக பந்து வீசியுள்ளார்.
ஹர்திக் இடத்தில் சிவம் துபே தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவரும் இந்த சீசன் முழுவதும் இதுவரை பந்துவீசவில்லை. பவுலிங் ஆல்ரவுண்டரை இந்திய அணி எதிர்பார்ப்பதால் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.