Beauty Queen: தலைமுடியைத் துறந்ததால், மகுடம் சூடிய நடன மயில்
)
கதிர்வீச்சு (radiation) மற்றும் கீமோதெரபி (chemotherapy) காரணமாக புற்றுநோய் நோயாளிகள் தலைமுடியை இழக்கிறார்கள். ஸ்ரவ்யா மனசா போகிரெட்டி என்ற நடனக் கலைஞர் தனது தலைமுடியை தானம் கொடுத்து ’அழகு என்பது உதிரும் தலைமுடியில் இல்லை’ என்று உணர்த்தியிருக்கிறார்.
)
நடனக் கலைஞரான ஸ்ரவ்யா, பி.டெக் மற்றும் எம்.டெக் படித்தவர்.
)
ஸ்ராவ்யா தனது தலைமுடியை ஹைதராபாத் ஹேர் நன்கொடை என்ற லாப நோக்கற்ற அமைப்புக்கு தனது முடியை நன்கொடையாக அளித்தார். ஸ்ரவ்யாவுக்கு நன்றி தெரிவித்த அந்த அமைப்பு, “ஒரு கிளாசிக்கல் டான்சராக இருப்பதால் புற்றுநோய் நோயாளிகளுக்கு முடியை தானமாக வழங்குவதற்காக மொட்டையடித்துக் கொண்டது மிகப் பெரிய விஷயம். கீமோதெரபி செய்யப்படும் புற்றுநோயாளிகளுக்கு உதவுவதற்கான உங்கள் முயற்சிகளை பாராட்டுகிறோம்” என்று புகழாரம் சூட்டியது.
புற்றுநோய் காரணமாக கீமோதெரபிக்கு முடி இழந்தவர்களுக்கு விக் மற்றும் இலவச முடி தேவைப்படுகிறது
நாள்தோறும், 40 முதல் 50 பேர் தங்கள் தலைமுடியை Hyderabad Hair Donationக்கு முடி தானம் செய்கிறார்கள்.