செரிமான கோளாறு சரியாக..சாப்பிட்டவுடன் ‘இதை’ குடியுங்கள்!
இந்தியாவில் பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்கள் பல உள்ளன. இதில், பெரும்பாலானவை பல மசாலாக்களை சேர்த்தவையாக இருக்கும். இந்த உணவு பழக்கங்களால் உடலுக்கு பல வகையான நன்மைகள் ஏற்பட்டாலும், செரிமான கோளாறு போன்ற உடல் நலக்கோளாறுகளும் ஏற்படுகின்றன.
செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கு பல பானங்கள் உதவுகின்றன இந்த பானங்களை நாமே வீட்டில் தயாரிக்கலாம். இதனால் நாம் பெரும் பயன்களும் ஏராளம். அவை என்னென்ன பானங்கள் தெரியுமா?
சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்தோ அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்தோ இந்த பானத்தை தயாரிக்கலாம். இந்த பானம் உணவுக்குப் பிறகு அருந்த சிறந்தது. சீரகத்தண்ணீர், திறம்பட நாம் சாப்பிட்ட உணவு ஜீரணிக்க உதவுகிறது.
இஞ்சி டீ நறுமணம் மற்றும் காரம் நிறைந்ததாக இருக்கும். இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு குணங்கள் சாப்பிட்ட உணவுகள் எளிதில் செரிமானம் ஆவதற்கு உதவுகிறதும். மேலும், இந்த பானம் அஜீரணம் மற்றும் குமட்டலை நீக்குகிறது.
மோரில், ப்ரோபயட்டிக் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இதை குடிப்பதை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பின்பற்றி வருகின்றனர். இதை சாப்பிட்டவுடன் அருந்துவதால் அசிடிட்டி (அமிலத்தன்மை) குறையும். இதனால் சாப்பிட்ட உணவு சீக்கிரமாகவே சரியாகும். உடலும் வலுபெறும்.
ஆயுர்வேதத்தின் படி, நெல்லிக்காய் அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருந்தாக பார்க்கப்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த, நெல்லிக்காய் சாறு ஆரோக்கியமான கல்லீரல் செயல்பாட்டிற்கு உதவி புரிகிறது. செரிமானத்தையும் எளிதாக்குகிறது, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி உடல் ஆரோக்கியத்திற்கு புத்துணர்ச்சியூட்டவும் செய்கிறது.
துளசி மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு அற்புதமான மூலிகையாகும். துளசியில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம். இதனால், சளி-இருமல் சரியாகும், செரிமான கோளாறுகளும் ஏற்படாமல் தடுக்கலாம். மேலும், துளசி தேநீரை குடிப்பதால் மனதும் ரிலாக்ஸாகும்.