தினமும் 1 அவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள்!
அவகேடோ பழங்களை சாப்பிடுவதால், நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு (LDL) குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதே போல, நல்ல கொழுப்பை (HDL) கூட்டுவதாகவும் கூறுகின்றனர்.
அவகேடோவில் இருக்கும் ஃபைபர் சத்துகள், செரிமானத்திற்கு உதவுமாம். இதனை மலச்சிக்கலாம் பாதிக்கப்படுபவர்கள் தினமும் சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
எடை இழப்புக்கு உதவும் பழங்களுள் ஒன்றாக இருக்கிறது அவகேடோ. இதில் இருக்கும் நல்ல ஃபைபர் சத்துகள் பசி எடுக்கும் உணர்வை கட்டுப்படுத்துகிறது. இதனால் டயட்டில் இருப்பவர்கள் இதனை பெரும்பாலும் எடுத்துக்கொள்கின்றனர்.
அவகேடோவில், வைட்டமின் கே மற்றும் காப்பர் சத்துகள் இருக்கின்றன. இவை, எலும்புகளை வலுவாக்க உதவுமாம்.
அவகேடோவில் இருக்கும் ஹெல்தி ஃபேட், மூளை சரியாக இயங்க உதவும் சத்துக்களை கொண்டுள்ளதாம். இது, நம் மூளையின் நரம்புகளை பாதுகாப்பதுடன் மறதி ஏற்படுவதையும் குறைப்பதாக கூறப்படுகிறது.
சரும பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஏற்கனவே ஏற்பட்டுள்ள சரும பாதிப்பில் இருந்து தப்பிக்க அவகேடோ பழத்தை சாப்பிடலாம்.
அவகேடோவில் அதிகளவு வைட்டமின் பி சத்துகள் இருப்பதால், அது சரும பாதிப்புகளை தடுக்க உதவுவதாக கூறப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)