Health Alert! அருமருந்தான நெல்லிக்காயை இரவில் சாப்பிடலாமா!
சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. எனினும், அதனை சரியான நேரத்தில் சாப்பிட்டால் அதிகபட்ச பலனை அடையலாம்.
நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.
ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது.
இத்தனை நன்மைகள் நிறைந்துள்ளது என்றாலும், இரவில் நெல்லிக்காய் சாப்பிட கூடாது என்கின்றனர் வல்லுநர்கள். இரவில் சாப்பிட்டால் புத்தி, வீர்யம், தேஜஸ் குறைந்து விடும் என எச்சரிக்கின்றனர்.