மாம்பழம் சாப்பிட்ட பிறகு `இவற்றை` மறந்தும் சாப்பிட வேண்டாம்
![மாம்பழம் மாம்பழம்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/07/08/236444-mango-5.jpg?im=FitAndFill=(500,286))
சில உணவுப் பொருட்களுடன் மாம்பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மாம்பழம் சாப்பிடும் போதோ அல்லது அதற்குப் பின்னரோ சில உணவுப் பொருட்களை மறந்தும் சாப்பிடக் கூடாது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.
![பப்பாளி பப்பாளி](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/07/08/236443-mango-4.jpg?im=FitAndFill=(500,286))
மாம்பழம் சாப்பிட்ட பிறகு பப்பாளியை சாப்பிட வேண்டாம். குமட்டல், வாந்தி மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படக் கூடும்.
![குளிர் பானங்கள் குளிர் பானங்கள்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/07/08/236442-mango-3.jpg?im=FitAndFill=(500,286))
மாம்பழம் சாப்பிட்ட பிறகு குளிர் பானங்களை தவிர்க்கவும். மாம்பழம் சாப்பிட்ட பிறகு குளிர்பானம் குடிப்பது உங்கள் செரிமானத்தை சீர்குலைக்கும்.
மாம்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும், ஏனெனில் மாம்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.
மாம்பழத்துடன் அல்லது மாம்பழம் சாப்பிட்ட பின் மசாலா அல்லது காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்