Health Alert: மெதுவாக கொல்லும் விஷமாக செயல்படும் ‘சில’ உணவுகள்!
சோடா மிகவும் விரும்பப்படும் ஒரு பிரபலமான பானம். இதை தயாரிக்க கார்பனேற்றப்பட்ட நீர் மற்றும் இனிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. சோடாவில் நிறைய அன்சாச்சுரேட்டட் சர்க்கரை உள்ளது. இது உங்கள் உடலில் கொழுப்பு போல சேமிக்கப்படுகிறது.
சுத்திகரிக்கப்படாத தேன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். தேனில் ஈஸ்ட் என்ற காளான்கள் இருக்கும். இவை தேனைப் புளிக்கச் செய்யும். இதனை அழிக்கத் தேனை 140-170 டிகிரி தண்ணீரிலோ அல்லது சூடான காற்றிலோ வைத்து எடுப்பார்கள். சுத்திகரிக்கப்படாத தேனில் பல தீங்கு விளைவிக்கும் நச்சுகள் உள்ளன, இதனை தொடர்ந்து சாப்பிட்டால் பலவீனம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ரெடிமேட் காலை உணவுகள்: இப்போதெல்லாம், காலை உணவில் கார்ன் பிளேக்ஸ், போன்ற ரெடிமேடாக பேக் செய்யப்பட்ட உணவுகள் மிகவும் விரும்பி சாப்பிடப்படுகின்றன. ஆனால், பேக் செய்யப்பட்ட இந்த உணவு நமது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது. அதற்கு பதிலாக, வீட்டில் பிரெஷ்ஷாக சமைக்கப்பட்ட காலை உணவை உண்பதே சிறந்தது.
பிரஞ்ச் பிரைஸ்: பலருக்கு பிரஞ்சு பிரைஸ் எனப்படும் உருளைகிழங்கு வறுவல் மிகவும் பிடித்தமான உணவாக உள்ளது. ஆனால் அதை அடிக்கடி சாப்பிடுவது உடல் நலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும். இந்த நொறுக்குத் தீனியில் டிரான்ஸ் கொழுப்பு அதிகம் உள்ளது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சியை பலர் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம் போன்ற பல கடுமையான பிரச்சனைகள் ஏற்படும்.