உங்களுக்கு 30 வயசாயிடுச்சா? அப்போ கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க

Wed, 15 Dec 2021-6:29 pm,

பொதுவாக ஆண்கள், 30 வயதை நெருங்கும்போது, எலும்புகள் பலவீனமடைய ஆரம்பிக்கும். எலும்புகள் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க, கால்சியம் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். இது உடல் எடையை குறைக்கவும் உதவும். தினமும் ஒரு கிளாஸ் பால் குடிப்பது மிகவும் அவசியமாகும்.

 

30 வயதிற்குப் பிறகு ஆண்களுக்கு இதய நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. உணவுப் பழக்கத்தால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து, அது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதய நோய்கள் வராமல் இருக்க உணவுக் கட்டுப்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாவிட்டால், வளர்சிதை மாற்றம் மெதுவாகி, அது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். இதைத் தவிர்க்க, உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் கவனம் செலுத்துங்கள்.

30 வயதிற்குப் பிறகு, ஆண்களுக்கு வழுக்கை பிரச்சனையும் அதிகமாக வரும். இதில் ஆண்களின் உணவு மற்றும் வாழ்க்கை முறைக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆண்கள் அதிகமாக புரதம், கால்சியம், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுவது நல்லது. தினமும் உடற்பயிற்சி செய்து, மன அழுத்தத்தைக் குறைத்து, நேரத்திற்கு தூங்குவதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

30 வயதிற்குப் பிறகு ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயின் ஆபத்து அதிகரிக்கிறது. இதனால், அடிக்கடி கழிப்பறைக்கு செல்வது, இரவில் சிறுநீர் கழிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அறிகுறிகளைக் கவனித்து உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link