Health Alert: இரவில் சாப்பிடக் கூடாத ‘சில’ பழங்கள்!

Wed, 19 Oct 2022-9:25 pm,

இரவில் சில பழங்களை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமின்றி இரவில் பழங்களை சாப்பிடுவதால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். எனவே முடிந்த வரை இரவில் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.இரவில் எந்தெந்த பழங்களை சாப்பிடக்கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது பலன் தராது. பலர் உடற்பயிற்சி செய்த பிறகு மாலையில் வாழைப்பழத்தை சாப்பிடுகிறார்கள். ஜூஸாக இருந்தாலும் சரி, ஃப்ரூட் சாலட்டாக இருந்தாலும் சரி, இரவில் சாப்பிடக் கூடாது. நீங்கள் இரவில் வாழைப்பழங்களை உட்கொண்டால், அது உங்கள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும், அதனால் தூக்கம் வருவதில் சிக்கல் இருக்கலாம். அதனால் இரவில் வாழைப்பழத்தை சாப்பிடவே கூடாது.

 

தினமும் ஆப்பிளை உட்கொள்வது நம் உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் ஆப்பிளை இரவில் சாப்பிடக்கூடாது. இரவில் ஆப்பிள் சாப்பிட்டால் உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆப்பிளில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் நார்ச்சத்து உள்ளது. ஆனால் இரவில் ஆப்பிள் சாப்பிடுவது செரிமான அமைப்புக்கு நல்லதல்ல. அதிகப்படியான நார்ச்சத்து காரணமாக, சாப்பிட்ட பிறகு தூங்கும் போது, வாயு அல்லது அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

இரவில்  சப்போட்டா சாப்பிட வேண்டாம். சப்போட்டாவில் சர்க்கரையின் அளவு அதிகம்.  எனவே சப்போட்டா சாப்பிட்டால், அது உங்கள் உடலின் சர்க்கரை அளவையும், ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக தூங்குவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, இரவில் சப்போட்டா சாப்பிட வேண்டாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link