காலையில் வெறும் வயிற்றில் பழ ஜூஸ் வேண்டாமே!
ஜூஸில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பெரும்பாலானவர்கள் காலை வேளையை ஜூஸுடன் தொடங்க விரும்புகின்றனர். ஆனால் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பதால் பல தீமைகளும் உள்ளன
பழச்சாறு குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் சிறந்தது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை என்றாலும் தவறான நேரத்தில், தவறான விதத்தில் எடுத்துக் கொள்வது உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும்.
பழச்சாறுகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது உங்கள் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
குளிர்ச்சியான பழ ஜூஸ் காரணமாக சளி ஏற்படலாம். உங்கள் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.