இங்க வலி இருக்கா? இது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்
)
தாடையின் பின்புறத்தில் வலி லேசான மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். இதில் தாடையில் இருந்து வலி ஆரம்பித்து கழுத்து வரை பரவுகிறது. இந்த வலி திடீரென்று ஏற்படுகிறது. இந்த வலி இருந்தால் இதை கண்டிப்பாக அலட்சியப்படுத்தக்கூடாது.
)
இரவில் திடீரென வியர்க்க ஆரம்பித்தால், அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறியையும் புறக்கணிக்காதீர்கள். இதற்கு, உடனடியாக மருத்துவ நிபுணரைத் தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சனையைச் சொல்லி தீர்வு காணுங்கள்.
)
படிக்கட்டுகளில் ஏறும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டால், உங்கள் இதயம் சரியாக வேலை செய்யவில்லை என்று பொருள் கொள்ளலாம். இது தவிர, மூச்சு விடுவதில் சிரமம், தலைசுற்றல், நெஞ்சு வலி போன்றவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.
பல வயிற்றுப் பிரச்சனைகள் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். ஏப்பம், வயிற்று வலி அனைத்தும் லேசான மாரடைப்பின் அறிகுறிகள். பெரும்பாலும் மக்கள் இந்த அறிகுறிகளை வாயுத்தொல்லை என நினைத்து புறக்கணித்து விடுகிறார்கள். இப்படி செய்வது நல்லதல்ல.
கையில் வலி அல்லது கூச்ச உணர்வு இருந்தால், அதுவும் லேசான மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். இந்த வலி மார்பு மற்றும் கழுத்து வரை பரவும். இந்த அபாயத்தை இலகுவாக எடுத்துக்கொள்வது ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)