கல்லையும் கரைக்கும் துளசி! இது சீறுநீரகக் கல்லை கரைக்கும் அபூர்வ மூலிகையின் மருத்துவ பண்பு
துளசி செடியில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஏனெனில் துளசியில் ஜிங்க் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே தேநீர் அல்லது மூலம் தினமும் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
துளசியில் கேம்பீன், யூஜெனால் உள்ளது. சளி மற்றும் இருமலின் போது மார்பில் சளி சேர்வது மிகவும் தொந்தரவாக இருக்கும். இதனால் மீண்டும் மீண்டும் இருமல் வரும். அப்படிப்பட்ட நிலையில் துளசி சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.
துளசியை நன்கு மென்று சாப்பிட்டால் ஈறு மற்றும் பல்வலி நீங்கும். கூடுதலாக, இது வாயில் உள்ள துர்நாற்றத்தைப் போக்கி, நல்ல மணத்தையும் கொடுக்கிறது. மவுத் ஃப்ரெஷ்னராகவும் துளசியை பயன்படுத்தலாம்
துளசி உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. உடலில் யூரிக் அமிலத்தின் அளவையும் குறைக்கிறது. சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு யூரிக் அமிலம் முக்கிய காரணம். துளசியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கீல்வாத நோயாளிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
துளசி இலைகளை அதிகம் உட்கொள்வது குமட்டல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். நீங்கள் ஏதேனும் குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரை அணுகவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)