Clove Benefits: மன அழுத்தம் முதல் வெயிட் லாஸ் வரை... கிராம்பு என்னும் சிறந்த ஆயுர்வேத மருந்து
சமையலறையில் நாம் தினமும் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல கடுமையான நோய்களுக்கு ஒரு சஞ்சீவியாகவும் செயல்படுகிறது. இந்த மசாலாப் பொருட்களில் ஒன்று கிராம்பு.
கிராம்பு பல ஆண்டுகளாக ஆயுர்வேதத்தில் நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. வயிறு வலி முதல் பல்வலி போன்ர பல வலிகளுக்கான நிவாரணமாகவும் உள்ளது. அத்தகைய மருத்துவ குணம் கொண்ட கிராம்பு என்னும் மசாலாவின் சிலஅற்புத நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
மன ஆரோக்கியம்: கிராம்பில் மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தை போக்கி, மூளையை சுறுசுறுப்பாக்க உதவும் பண்புகள் உள்ளன என்பது மிகச் சிலருக்கே தெரியும் ஆகையால் மன அழுத்தம் நீங்க கிராம்பு டீ குடிப்பது நன்மை பயக்கும்.
செரிமான ஆரோக்கியம்: உணவு உண்ட பிறகு ஒரு கிராம்பை மென்று சாப்பிடுவது வயிற்று உப்புசம், வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது. இதனால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது.
பல் வலியை போக்கும் வலி நிவரணி: கிராம்பு வாய் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. கிராம்பு எண்ணெய் வாய் புண்கள் மற்றும் பல்வலிக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதனை உட்கொள்வதால் வாய் துர்நாற்றமும் நீங்கும்.
எடை இழப்புக்கு உதவும் கிராம்பு: கிராம்பில் இயற்கையான கொழுப்பு அமிலங்கள் மற்றும் சின்தசிஸ் பிளாக்கர்கள் நிறைந்துள்ளன. மேலும், இவை செரிமானத்தை தூண்டி, வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி: கிராம்புகளில் உள்ள வைரஸ் எதிர்ப்பு பண்புகள் பல நோய்களைத் தடுக்கிறது. இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இது உடலை ஆபத்தான ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.