ஜிம் செல்லும் வழக்கம் உள்ளவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்குத்தான்
தேங்காய் நீரில் 5 வகையான எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இளநீரில் நல்ல அளவு பொட்டாசியம் உள்ளது. மறுபுறம், இளநீர் வைட்டமின் பி மற்றும் ஆண்டியாக்சிடெண்டின் நல்ல மூலமாகும். இதை உட்கொள்வதன் மூலம், உடற்பயிற்சியின் பின்னர் தசைகளில் வரும் பிடிப்புகள் நீங்கும். ஆகையால், நீங்களும் ஜிம் செல்பவராக இருந்தால், தினமும் இளநீரை உட்கொள்ளலாம்.
இளநீர் உட்கொள்வதால், நாள் முழுவதும் உடலில் ஆற்றல் இருக்கும். இதனை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. எனவே காலை வேளையில் உடற்பயிற்சி செய்த பின்னும் இளநீரை உட்கொண்டால், நாள் முழுவதும் உடலில் ஆற்றல் இருக்கும்.
அதிக எடை கொண்டவர்களில் அதிகமாக சாப்பிடும் பிரச்சனை அடிக்கடி காணப்படுகிறது. வொர்க்அவுட்டிற்குப் பிறகு இளநீர் உட்கொண்டால், நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருப்பதோடு, பசியும் இருக்காது. இது உடல் எடையை குறைக்கவும் உதவும்.
உடலில் கலோரிகள் அதிகரிக்காத வண்ணம் ஒரு பானத்தை நீங்கள் குடிக்க விரும்பினால், அதற்கு இளநீர் உங்களுக்கு ஏற்ற தேர்வாக இருக்கும். இது உடலை ஃபிட்டாக வைத்திருக்க உதவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)