வெளுத்துக்கட்டும் வெந்தயம்: உடலுக்கு அளிக்கும் எக்கச்சக்க நன்மைகள்
இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் உடல் பருமனால் சிரமப்படுகின்றனர். பலவித முயற்சிகளை எடுத்தும் உடல் எடையை குறைக்க முடிவதில்லை. பல நிபுணர்களின் கூற்றுப்படி, குறைந்த வளர்சிதை மாற்ற விகிதத்தால் உடல் பருமன் அதிகரிக்கிறது. வெந்தயத்தின் நுகர்வு வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. இது உடல் பருமனை குறைக்கிறது. இதற்கு முளைத்த வெந்தயம் அல்லது வெந்தய டீயை உட்கொள்ளலாம்.
உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் வெந்தய விதைகளை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். வெந்தயத்தில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், நீங்கள் முளைத்த வெந்தய விதைகளைப் பயன்படுத்தலாம். இரும்புச்சத்து குறைபாடு ஆண்களை விட பெண்களில் அதிகம் காணப்படுகிறது.
வெந்தய விதைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால், முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். முதலில் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் தண்ணீரை வடிகட்டி, வெந்தயத்தை ஒரு துணியில் கட்டி, அதன் நீரில் தலைமுடியைக் கழுவவும். ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடுவதன் மூலமும், அதன் நீரில் முடியைக் கழுவுவதன் மூலம், முடி உதிர்தல் பிரச்சனை குறைவதுடன், முடி வளர்ச்சியும் வேகமாக அதிகரிக்கும்.
இன்றைய காலகட்டத்தில் மாதவிடாய் சரியான நேரத்தில் வராமல் இருப்பது பெண்களுக்கு ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. பல பெண்கள் இந்த பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது. உங்களுக்கும் மாதவிடாய் சரியாக வராமல் தொந்தரவு இருந்தால், முளைத்த வெந்தயத்தைப் பயன்படுத்தலாம். இது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது மற்றும் மாதவிடாயை சீராக்குகிறது.
வயிற்றுப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், வெந்தய விதைகளை தொடர்ந்து பயன்படுத்தலாம். இதற்கு வெந்தய முளைகளைப் பயன்படுத்தலாம். முதலில் வெந்தய விதைகளை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்யவும். அதன் பிறகு தண்ணீரில் ஊறவைத்து சில மணி நேரம் அப்படியே விடவும். நன்றாக ஊறியதும் பருத்தி துணியில் கட்டி முளைக்க வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். முளைத்த வெந்தயத்தில் ஆண்டிஆக்சிடண்ட் பண்புகள் உள்ளன. இது வயிற்றின் இரைப்பை குடல் அமைப்பை சரிசெய்ய உதவுகிறது. செரிமானத்திற்கு உதவும் பல கரையக்கூடிய நார்ச்சத்து வெந்தய விதையில் உள்ளது.