சுறுசுறுப்பான மூளை, துடிப்பான இதயம், சிக்கென்ற உடல்... தினம் 4-5 பிஸ்தா பருப்பு போதும்
பிஸ்தா ஊட்டசத்துக்கள்: நம்முடைய உடலுக்கு வலு தரும் நட்ஸ்களில், பிஸ்தா பருப்பு முக்கிய இடம் வகிக்கிறது. இதில், புரதசத்து, வைட்டமின், நார்ச்சத்து போன்றவை தாராளமாக உள்ளது. இதில் வைட்டமின் E மற்றும் B சத்துடன் தாமிரம் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம் என ஏகப்பட்ட தாதுக்கள் உள்ளன.
நினைவாற்றல்: பிஸ்தாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மூளை சுறுசுறுப்பாக இயங்கும். மூளைக்கான ரத்த ஓட்டமும் சீராக கிடைக்கும் என்பதால், நினைவாற்றல் அதிகரிக்கும். ஞாபக சக்தி அதிகரிக்க குழந்தைகளுக்கு தினமும் பிஸ்தா பருப்பு கொடுக்கலாம்.
இதய ஆரோக்கியம்: பிஸ்தாவில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இரத்த அழுத்தத்தையும், கொழுப்பையும் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் பெற்ற பிஸ்தா என்பதால், இதய நோய் ஆபத்துக்களை பெருமளவு குறைக்கிறது.
பார்வைக் கூர்மை: பிஸ்தாவில் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் நிறைந்துள்ளது. இது கருவிழி சிதைவை தடுக்கிறது. பார்வைத் திறன் சிறப்பாக இருக்கும். பொதுவான கண் பிரச்சனைகள் எதுவும் எளிதில் ஏற்படாது.
உடல் பருமன்: பிஸ்தா என்னும் உலர் பழத்தில் மற்ற நடஸ் வகைகளை விட குறைவான கலோரிகள் உலதோடு, அதிக நார்சத்து மற்றும் அதிக புரதம் உள்ளது. இதனால் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது வரப்பிரசாதம்.
மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் மெக்னீசியம் மன அழுத்தம், மன பதற்றத்தை போக்கி, மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
நீரிழிவு நோய்: பிஸ்தா பருப்பு குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவியாக இருக்கும். எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு சுகர் லெவலை கட்டுப்படுத்த பெரிதும் உதவும்
குடல் ஆரோக்கியம்: பிஸ்தாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமானத்தையும் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் மிகவும் நன்மை பயக்கும்.
பிஸ்தா மிகவும் நல்லது என்றாலும், அதிகமாக சாப்பிடுவதால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். குறிப்பாக உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால் பிஸ்தாவை உட்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரை அணுகி, எந்த அளவிற்கு எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசனை கேட்கவும்.