பின்னோக்கி நடப்பதால் ஏற்படும் 7 நன்மைகள்! என்னன்னு தெரிஞ்சிக்கோங்க..
பின்னோக்கி நடைப்பயிற்சி:
நம்மில் பலருக்கு சாதாரண நடைப்பயிற்சி செய்து பழக்கம் இருக்கும். ஆனால், பின்னோக்கி நடப்பதால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? இங்கு அது குறித்து பார்ப்போம்!
சாதாரண நடைப்பயிற்சியும் சரி, பின்னோக்கி செல்லும் நடைப்பயிற்சியாக இருந்தாலும் சரி அவை இரண்டுமே நம் மனநிலையை மேம்படுத்த உதவுமாம். எனவே, பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதை ஆரம்பிக்கலாம்.
தசை பலம்:
கால் மற்றும் தொடை தசைகள், நாம் பின்னோக்கி நடக்கும் போது வலுவாகும் என கூறப்படுகிறது.
பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வது நம் உடலில் உள்ள மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஹார்மோன்களை சுரக்க வைக்குமாம். இதனால் மன நலன் மேம்படும்.
முட்டி வலி:
முட்டி வலியால் அவதிப்படுபவர்கள், பின்னோக்கி நடைப்பயிற்சி மேற்கொண்டால் அதிலிருந்து தப்பிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மூளை திறன்கள்:
மூளை செயல்பாட்டை அதிகரிக்க, நினைவாற்றலை தக்க வைத்துக்க்கொள்ள பின்னோக்கி நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
கொழுப்பு:
பின்னோக்கி நடப்பதால், சாதாரண நடைப்பயிற்சியில் குறைவதை விட அதிக கலோரிகள் குறையும் என கூறப்படுகிறது.
உடல் சமநிலை:
உடலை சமநிலையுடன் வைத்துக்கொள்ள பின்னோக்கி நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)