தினமும் வால்நட்ஸ் சாப்பிடுங்க.. இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி!
)
நட்ஸ் வகைகளில் தனித்துவமான மருத்துவ குணங்களை கொண்ட வால்நட்டில், ஃபைபர், கார்போஹைட்ரேட், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் நல்ல கொழுப்புச் சத்துக்கள் உள்ளன.
)
வால்நட்ஸில் ஆண்டி - ஆக்ஸிடண்ட்டுகள் மற்றும் ஒமேகா 3 கொழுப்புக்கள் நம் உடலுக்கு மிகவும் நல்லது. இதை உட்கொள்வதன் மூலம் ஞாபகசக்தியை அதிகப்படுவதோடு ஒரு வேலையில் நிலையான கவனம் செலுத்த உதவுகிறது.
)
வால்நட்ஸை உட்கொள்வதால் கேட்ட கொழுப்புகள் குறைகிறது.அதேபோல் இரத்த நாள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வால்நட்ஸில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்து இருப்பதால் பசியை கட்டுப்படுத்துகிறது. இது ஆரோக்கியமான உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.
வால்நட்ஸில் உள்ள ஒமேகா 3 போன்ற அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள், மூளையின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். இதனை உட்கொள்வதால் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.
மற்ற பருப்பு வகைகளை காட்டிலும் வால்நட்சில் வைட்டமின் ஈ, எலாஜிக் அமிலம் போன்ற சிறந்த உயர்தர ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
வால்நட்ஸை தினமும் உட்கொள்வதால் தலைமுடி உதிர்வை குறைக்க முடியும். அதில் உள்ள பயோடின் என்னும் வைட்டமின் பி7 முடியின் வலிமை அதிகரித்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.