உடல் அதிக சூடாக உள்ளதா? இதையெல்லாம் சாப்பிடுங்க!
உங்கள் உடலின் டெம்பரேச்சரை சரியான அளவில் வைக்க மிகவும் உதவக்கூடிய ஒரு சிறப்பான பொருள் தண்ணீர். தினமும் 2.7லி முதல் 3.7லி வரை தண்ணீர் குடிப்பது உடலை குளுமையாக வைத்திருக்க உதவுகிறது.
தர்பூசணி பழத்தில் அதிகளவு தண்ணீர் சத்து உள்ளது, இதில் கிட்டத்தட்ட 90% தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த பழத்தில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் நிறைந்துள்ளதால் உடலை குளுமையாக்க இது உதவுகிறது.
வெள்ளரிக்காய் கோடையில் எவ்வளவு சிறப்பான உணவு என்பது அனைவருக்கும் தெரியும். வெள்ளரிக்காயில் அதிக நீர்சத்துள்ளது, இதில் நரசத்தும் நிறைந்துள்ளது, மேலும் உடலை குளுமையாக்க இது உதவுகிறது.
தண்ணீர் அதிகம் அருந்துவது உங்களுக்கு பிடிக்காவிடில், இளநீரை தாராளமாக பருகலாம். இது சுவையாக இருப்பதோடு இதில் பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் நிரம்பியுள்ளதால் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.
சோற்றுக்கற்றாழை மிகவும் குளிர்ச்சியான பொருள், இதனை தினமும் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாவதோடு உங்கள் சருமமும் எவ்வித பிரச்சினையில்லாமல் பளபளப்பாக இருக்கும்.